உலகச் செம்மொழி – அத்தியாயம் 3
(அத்தியாயம் 2 செல்ல இங்கே சொடுக்கவும்)
வணக்கம்!
போன அத்தியாயத்த படிச்ச ஒரு தமிழ் ஆய்ந்த நண்பர் ஒருத்தர், தமிழ் மற்ற மொழிகளுக்கு எவ்வளவு வழங்கியுள்ளது என்று நீங்க எழுதுனதப் படிக்க. ஆச்சரியமாகவும், அருந்தகவலாகவும் இருந்தது. இச்சொற்கள் மற்ற மொழிகளில் கையாளப்பட்டது எப்போது எனும் ஆதாரக் கட்டுரைகள், குறிப்புகள் ஏதும் உங்களிடம் இருப்பின் அவற்றின் விவரங்களை வெளியிட முடியுமான்னு கேட்டாங்க.. ஏன்னா அவுங்க, இணயத்துல பல வார்த்தைகளுக்கு மூலம் தேடி பார்க்கும் போது அது பெரும்பாலும் old French, Latin , Greek, middle English லேயிருந்து வந்ததாகவே இருக்கும். ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தமிழில் இருந்து வந்ததாக இருக்குன்னு ஒரு சந்தேகத்த கேட்டு இருந்தாங்க.
அந்த நண்பர் சொன்னது மிக சரியான வாதம். இதே போல பல வாசகர்களுக்கும் சந்தேகம் வந்திருக்கும்
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு நேராக சென்றச் சொற்கள் மிகக் குறைவு. இந்த நிகழ்வுகள் சுமார் 450 – 500 ஆண்டுகளுக்கு உட்பட்டது. அதற்கு ஆங்கிலேயர்கள் இங்க வந்து ஆட்சி செய்த போது, நேரடியான ஆங்கில வார்த்தைகள் இல்லாத புவியியல் சார்ந்த பொருட்களுக்கும் , இடங்களுக்கும் தமிழ்ச் சொற்களை ஆங்கிலப் படுத்திக்கொண்டனர். அவ்வாறு சென்ற சொற்கள் Etymologyல் தமிழில் இருந்து வந்ததாக இருக்கு.
ஒரு 200 -250 ஆண்டுகளுக்கு முன்பு வரையும் உலக வர்த்ததத்தில சீனர்கள், தமிழர்கள், அரபியர்கள்தான் கோலோச்சிக் கொண்டிருந்தனர். தமிழர்களால் அரபிய கடற்கரைப்பட்டினங்களில் இறக்கப்பட்ட பொருட்களும், அரபியர்களால் தமிழக கடற்கரைகளில் வாங்கப்பட்ட பொருட்களும் ஐரோப்பிய சந்தைகளில் அரபியர்களாலும் தமிழர்களாலும் விற்கப்பட்டன. அப்பொழுது வணிகம் சார்ந்த தமிழ்ச் சொற்களும், பொருட்களின் பெயர்களும் ஐரோப்பிய மொழிகளுடன் கலந்தன.
வணிகத்தின் மிக முக்கிய பொருளான காசு – cash என வழங்கி வருவதைக் காணலாம்.
(பட்டுப்பாதை)
அப்ப மத்த சொற்கள் எப்பட போச்சின்னு தெரிந்து கொள்ள கொஞ்சம் வரலாறு கொஞ்சம் புவியியல சொல்லனும்.
ஆங்கிலம் என்பது ஆங்கிலோஸ் என்ற ஒரு சின்ன இனக்குழுவால செருமனியில பேசப்பட்டு வந்த ஒரு மொழி. English என்ற வார்த்தையை எப்படி ஆங்கிலம் என்று எப்படி சரியாக தமிழ்ப்படுத்தி இருக்காங்க என்று இப்பப் புரிஞ்சிக்கிட்டு இருப்பிங்க..
செருமனிங்கிற வார்த்தைக்கும் தமிழ் மூல வார்த்தைகளாக சேர- செருகு என்ற மூலச் சொற்களா சொல்லுறாங்க.
வேறு எப்படி எல்லாம் தமிழ் மற்றைய மொழிகளுக்குப் பரவியது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
– சத்யா
சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள். வாரியார் சுவாமிகள் இது போன்று மொழியியலை அவ்வப்போது ஒரு சில தகவல்களோடு விளக்குவார். அப்படி அவர் சொன்ன ஏடு-இட்டோர்-இயல் எடிட்டோரியல் என்பதாக மாறியது என்ற தகவல் இன்னும் நினைவிலுள்ளது.
நன்றி ஸ்ரீதர்
தமிழ் சொற்க்கள் மற்ற மொழிகளுக்கு ஊடுருவிய விதம் படிக்க அருமையாக உள்ளது. இன்னும் நிறைய வரலாற்று சான்றுகள் கிடைக்கும் என நம்புகிறேன். – சச்சிதானந்தன் வெ.
நன்றி சச்சிதானந்தன்