உலகச் செம்மொழி – அத்தியாயம் 10
அத்தியாயம் 9 செல்ல இங்கே சொடுக்கவும்
மலாய் மொழி ஆஸ்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி. இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூனே, சிங்கப்பூர், தாய்லாந்து, ஃபிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. Dr. ரொலண்ட் பிராடெல்,முனைவர் சத்தியானந்தா, மற்றும் ஆய்வாளர் சஞ்சிவி ஆகிய மூவருமே மலாயாவிற்கு நாகரிகத்தை அளித்தவர்கள் தென்னாட்டுத் தமிழர்களே எனக் கருதுகின்றனர். மலாயா என்னும் பெயரிலே தமிழ் மணங்கமழ்வதை போன்றே சிங்கப்பூர் என்ற பெயரிலும் தமிழ் மணம் கமழ்வதைக் காணlலாம். பழங்காலத்தில் தமிழர்கள் மலேசிய நாட்டைக் கடார ம் என்று குறிப்பிட்டனர். பட்டினப்பாலை என்ற நூல் இந்நாட்டினைக் காழகம் என்று குறிப்பிடுகின்றது.. நீல உத்தமச் சோழன் என்ற சோழ மன்னன் சிங்கபுரத்தை (சிங்கப்பூர்) நிறுவினான். மலாக்கா பகுதியில் சோழர் ஆட்சியே நடைபெற்றது. இம் மன்னர்கள் இசுலாமிய மதத்தைத் தழுவி உள்ளூர்ப் பெண்களை மணந்தனர். எனவே இவர்கள் மலாக்கா சுல்தான்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சி தமிழில்தான் நடந்தது. கணக்குகளும் அரச கருமங்களும் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதன் காரணமாகவே மலாய் மொழியில் சில ஆயிரக்கணக்கான தமிழ் மற்றும் தமிழ் மூலச்சொற்கள் கொண்ட வடமொழிச் சொற்களும் குடி புகுந்தன. சில பல வடமொழி வேரைடைய சொற்களும் மலாய் மொழியில் கலந்துள்ளன.இவையாவும் ”வடவெழுத்து ஒரீஇ தமிழெழுத்து மாரி” தமிழ் தமிழர் வாழ்வில் கலந்தே அங்கு பயணமாகின.
தமிழ் மற்றும் மலாய் மொழியிலுல்ல தமிழ் சொற்கள்
1.அதி- அதி(உயர்ந்த)
2.அடி-அடி – அடே அடே
3.அடிகார – அதிகாரம்
4.அண்டை – அண்டை
5.அந்டாரா – அந்தரம்
6.ஆரம் – கரம்
7.அல்பா –அல்பம்
9ஆச்சி –ஆச்சி
10.ஆயா- ஐயா
11.இஞ்சா – இஞ்சி
12. இடம் – இட்டம்
13.இலை -இலை
14.உட்டமா – உத்தமம்
15.உச்சாப் – உச்சரி
அடுத்த இதழ்ல நாம தாய் மொழிக்கும் தமிழ் மொழிக்குமான தொடர்ப பார்க்கலாமுங்க.தமிழ் நம்ம தாய் மொழிதாங்க ஆனா நான் சொன்னது தாய்லாந்துல பேசுகின்ற தாய் மொழி
-சத்யா-
குறிப்பு நூல்கள்
wiki
முனைவர் சஞ்சிவியின் ஆராய்சிக் கட்டுரைகள்