காட்டரிசிக் கஞ்சி
மினசோட்டா ஆதிவாசிகளும் காட்டரிசியும்
தெற்காசியக்கண்டத்தவராகியத் தமிழர்க்கு பண்டயக்காலத்தில் இருந்து இன்றுவரை உணவில் நெல் அரிசி பிரதானமான தானியம். இதே போன்று மினசோட்டா வாழ் ஆதிவாசி மக்களுக்கும் அத்தியாய தானியம் காட்டு அரிசியே. மினசோட்டா மாநிலப் பிரதான காட்டரிசி்ப்பிரதேசம்.
இதை தமது மொழியில் மனோமின் Manomin (Zizania aquatic L.) என்று அழைக்கின்றனர்.இம்மக்கள் ஏரி, குளக்கரைகளில் தாமாகவே விளையும் காட்டு அரிசியைக் கடவுள் பாக்கியம் என்று எடுத்துக்கொள்வர். இந்த புல்லு வகையைச்சேர்ந்த தாவரங்கள் மினசோட்டா, அயல் அமெரிக்க, கனேடிய மாகாணக் காட்டேரிகளிலும் காணபடும். காட்டரிசியானது ஆதிவாசிகளால் ஓடத்தில் சென்று, கம்புகளால் தட்டித்தானியத்தை சேகரித்து, வெய்யிலில், விறகு அடுப்பு வெப்பத்தில் காயவைத்து ஒன்று கூடல்களில் பரிமாறப்படும் உணவாகும்
காட்டரிசிக் கஞ்சி
தேவையானவை
- 2 quarts கொதித்து வடித்த மரக்கறிச் சாறு/கோழிக்கறிச் சாறு (vegetable broth /chicken broth)
- 1/2 இறாத்தல் சிறிதாக நறுக்கப்பட்ட புதிய காளான்,
- 1 கோப்பை மிகச்சிறிதாக நறுக்கப்பட்ட செலரி
- 1 கோப்பை துருவப்பட்ட கரட் கிழங்கு
- 1/2 கோப்பை மிகச்சிறிதாக அரியப்பட்ட வெங்காயம்
- 1 தேக்கரண்டி உலர்ந்த பாசிலி (parsley)
- 1/4 தேக்கரண்டி சிறிதாக நசுக்கி, நறுக்கப்பட்ட உள்ளி
- 1/4 தேக்கரண்டி உலர்ந்த தைம் (Thyme)
- 1/4 வெண்ணெய் (butter)
- 1/4 கோப்பை கோதுமை மா (All purpose flour)
- 1 can (10-3/4 ounces) condensed cream of mushroom soup, undiluted
- 1/2 கோப்பை வெள்ளை திராட்சை சாராயம் white vine
- 3 கோப்பை அவித்த காட்டு அரிசிச் சோறு –அரிசியை சாதாரண சோறு முறைப்படி அவித்துக்கொள்ளலாம்
- தேவையானால் 2 கோப்பை சீவிய வாதுமைப் பருப்பு Almond
- மேலும் 2 கோப்பை கொதித்து வடித்த மரக்கறிச் சாறு//கோழிக்கறிச் சாறு vegetable broth /chicken broth
செய்யுமுறை
அகன்ற விசாலமான பாத்திரத்தில் வெண்ணெய், மற்றம் கோதுமை மாவையும் தவிர மற்றையும் சேர்த்து அடுப்பில் கொதித்துக் கொப்பளிக்கும் அளவுக்கு கொண்டு வரவும். பின்னர் வெப்பம் குறைத்து மூடி இன்னும் 30 நிமிடத்திற்கு அடுப்பில் விடவும். அதன் பின்னர் கஞ்சியில் அவித்த காட்டரிசி, கோதுமை மா, மேலும் தேவையான அளவு உப்பும் சிறிது சிறிதாகச் சேர்த்து மிருதுவாக கிளையவும். மாமிசம் உண்பவர்கள் அவித்த சிறிய சதுர கோழித்துண்டுகள், ஹாம் துண்டுகளையும் சேர்க்கலாம். இது கஞ்சியைத் தடிக்கவைக்கும்