உலகச் செம்மொழி – அத்தியாயம் 5
அத்தியாயம் 4 செல்ல இங்கே சொடுக்கவும்
வணக்கம்!
ஆஸ்திரேலியா என்ற நாட்டின் பெயருக்கான தமிழ் மூலத்தை போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆங்கில மூலச்சொல்லகராதியில் ஆஸ்திரேலியா என்ற சொல் லத்தினிய மொழியில் இருந்து வந்ததாக இருக்கின்றது.
Terra australis (south country) – >ஆஸ்திரேலியா.
லத்தினிய மொழியிலும் இது தென் திசை நாடு என்ற பொருளில் தான் வழங்கப்படுகின்றது. இது தமிழ் மற்றும் லத்தினிய மொழிகளுக்கான தொடர்பை எடுத்துக்காட்டுகின்றது. லத்தினிய தமிழ் மொழிக்கான தொடர்பை பின்னால் வேறொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்.
இந்திய பெருங்கடல் பகுதியில இருக்கின்ற மற்றும் ஒரு தீவு சுமத்திரா. என் போற்றுதலுக்குறிய மொழி ஆய்வாளர் திரு மா.சோ விக்டர் அவர்கள் இது செம்மதுரை என்ற சொல் மூலத்திலிருந்து மருவியதாக விவரிக்கின்றார்.
செம்மதுரை -> செம்மதுரா -> சுமத்ரா
தமிழ் வளர்த்த குமரிக்கண்டத்து தென்மதுரை, தற்கால மதுரை, கங்கை கரையிலுள்ள வடமதுரை(மத்துரா) என்ற வரிசையில் தமிழன் கண்ட மற்றுமொரு நகரம் செம்மதுரை.
மடகசக்கர் : மடல் கசங்கு = விரிந்திருக்கும் மட்டைகளைக் கொண்ட பனைமரம். மடக்கசங்கு என்பதே மடகசக்கர் என்று திரிந்தது. கசங்கு = பனைமரம்
மாலத் தீவு : மாளல் தீவு -> பெருவெள்ளத்தால் மாண்டுப்போனவர் வாழ்ந்த இடம்.மாளல் தீவு =மாலத் தீவு என மருவியது.
செங்களத் தீவு = சிங்கத்தின் பெயரால் சிங்களம் என்று சொல்லப்பட்டதாக கருதப்பட்டாலும், செங்களம்= சிவப்பு நிறம் என்ற பொருளில் சொல்லப்பட்டதே. (சிவப்பு நிற கற்கள் கிடைத்த இடம்- இரத்தன புரி)
நிக்கோபார் : நக்கவாரி= தென்னை வகையைச் சார்ந்தது. நக்கவரம் -> நிக்கோபார் என்று மருவியது.
ஜாவா= ய+அகம்= யாவகம். தென்திசை நாடு. யாவகம் பின்னர் சாவகம் என்றாகி , சாவா என்று நிலைத்தது
மலேசியா= மலேயா எனப்பட்ட மலைநாடு
கினியா= கனிகள் தீவு அல்லது பழங்கள் நிறைந்த தீவு
ஆப்ரிக்க கண்டத்தில இருக்கும் பல நாடுகளுக்கும் பெயர்கள் தமிழ்
மூலத்துடன் தான் உள்ளது. உதாரணத்திற்கு, வெப்பமான பகுதியில இருக்கும் ஆப்ரிக்க நாடுகளான சூடான் என்பது சூடான என்ற காரணப் பெயரிலும், எரித்திரேயா என்பது எரி– தரை – யா (வெப்ப பூமி) என்ற காரணப் பெயரிலும், காங்கோ – காங்கை என்றகாரணப் பெயரிலும், காமருன் -> காமனூர் என்றகாரணப் பெயரிலும் அழைக்கப்படுகின்றது.
குறிப்பு நூல்கள்/ கானொளிகள்
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
தமிழர் உலகம்.
– சத்யா