காதல் விளம்பல்கள்
காதல் கொண்டேன் !
தொடாமலே பார்க்கிறேனடி
கண்ணாலே கொல்றியேடி
துண்டு துண்டா ஆகிறேனடி
ஒரே பார்வை பாரேண்டி!
எனைக் களவாடியே போறியேடா
உன்னாலே உசிறே போகுதடா
ஊரார் பார்வை எரிக்குதடா
உன் பார்வைக்கு ஏனோ ஏங்குதடா!
காதல் காவியம் படைத்திடத் தானடி
கடல்கடந்து பொருள் ஈட்ட வந்தேனடி
ஊராரை உன் பார்வையால் எரித்துடுடி
உன்னாலே உயிர் வாழ்கிறேனடி!
எனைக் கவர்ந்த கள்வனடா
கரையோரம் விழி வைத்தேனடா
கனவினிலே கட்டியணைக்கக் கண்டேனடா
கனவு நனவாக சித்தம் கொண்டேனடா!
அந்த ஒரு நொடி
உன்னைக் கண்ட நொடியில் உண்மையில்
பெண்மை யாதென உணர்ந்தேன்
உன் கண் மையில் என் மெய்யும் உறைந்திட
நான் நிலை தடுமாறிப் போனேன்….!!
உன் முத்துப் பல்லைக் கண்ட பொழுது
நான் மூர்ச்சையாகிப் போனதை அறிந்தேன்
உன் இதழில் புன்னகை தவழ்வதைக் கண்ட பொழுது
நான் பிறந்ததன் பயனை அடைந்தேன்…!!
உன் கடைக்கண் பார்வை என் மேல்பட்ட பொழுது
கம்பன் காணா அழகினைக் கண்டதைப் போல்
பேருவகை கொண்டேன் !
எனையறியாமல் விரல்பட
நாணமும் வெட்கமும் ஒருசேர
மௌனத்தின் மொழிதனை உன்னில் கண்டேனடி !
பரிசமிட !
காதலெனும் பருவத்தே
காலமகள் வந்திசைக்க
கன்னி நீயோ செவிமடுக்க
கண்கள் கலங்குதடி ….!
உதறி விட்ட உன்னகத்தே
உள்ளம் இச்சை கொண்டிருக்க
உளமறிந்த நீயோ கலங்காதிருக்க
உன் மெளனத்தால் சாகிறேனடி ….!
பாலை நிலமாயிருந்த என்னகத்தே
பழமுதிர்ச் சோலையாய்ப்
படர்ந்த உனைப் பரிசம் போடப்
பாவி மனம் பதறுதடி….!
உமையாள்
Tags: love