\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

முறிந்த மின் வலயத்தை மாற்றலாமா?

நளினமாக நமது விரல்கள் நம்மையே அறியாது நமது தொலைபேசியில் நர்த்தனம் செய்ய நறுக்குத் துணுக்குகளையும், நல்ல படங்களையும் நன்றாகப் பார்த்துச் சிரித்து, சுவாரஸ்யமான செய்திகளையும் சுவைத்துப் பார்த்துக் கொண்டுள்ளோம். எல்லாம் நல்லபடியாகத்தானே உள்ளது. முறிந்த மின் வலயமா? அது எப்படி? புரியவில்லையே என்று நாம் தலையைச் சொரியலாம்.

இவ்விடம் நாம் குறிப்பிடுவது உங்கள் கைப்பேசி, தட்டுபலகை தொழிற்பாட்டை அல்ல. அதன் பின்னணியில் நடைபெறும் சமுதாய சம்பிரதாய முடங்கல்களை. மின்வலயங்கள் மற்றும் சமூகவலயங்கள் பல்லாண்டுகள் உள்ளன போனறு நமக்குத் தெரியினும் அவற்றின் வரலாறு 30 ஆண்டுகளுக்கும் குறைந்தது தான். மார்ச் 11ம் தேதி, 2017 மின் வலயத்தின் (word wide web)   இன் 28ஆம் வருடம்.

எனவே இந்த மூன்று தசாப்தங்களுக்கும் குறுகிய காலத்தின் மின்வலய வளர்ச்சி பற்றி  அதன் தந்தை, மதிப்புக்குறிய சேர் ரிம் பேர்ணேஸ்-லீ (Sir. Tim Burness-Lee) அவர்கள், தனது  ஞாபகார்த்தக் குறிப்பில் சில அவதானிப்புக்களை எடுத்துக் கூறியுள்ளார்.

மின் வலயம் உருவாக்கப்பட்டபோது அதன்  கொள்கை தூய்மையாகயிருந்தது. அதைப் பாவிக்கும் யாவரும் தகவல் பரிமாறிக் கொள்ளவும், அறிவியல், கலாச்சாரம் என அனைத்தையும் பிராந்திய எல்லைகள் தாண்டி புரிந்து கொள்ளவும் வலைத்தளங்கள் உதவின. மேலும்  சேர் .பேர்ணேஸ் உலகச் சமூகம் மேம்படவே மின் வலையத்தை உருவாக்கினார். வலையத்தின் வரலாற்றைப் பார்த்தால், அது பொதுவுடைமையையும், சமத்துவத்தையும் கொண்டமைந்திருந்ததை உணர முடியும். எனினும், சென்ற சில வருடங்களில் வலயம் மாற்றங்களுக்கு உள்ளானது. அரசியல், வர்த்தகவியல் மேலோங்கி சுயநலமும், பேராசையும் பெருகியுள்ளதாக கவலை கொள்கிறார்  ரிம் பேர்ணேஸ்-லீ.

முக்கியமாக மூன்று பிரதான தடங்கல்கள் மினவலயக் கொள்கையை முறி்க்கின்றன. எமது உலகளாவிய சமூகத்தின் எதிர்காலத்திற்காக நாம் விழிப்புணர்வுடன் உடன் நின்று இந்த ஊடுருவிகளை மாற்ற வேண்டும் என்கிறார் மின்வலயத்தின் தந்தை பேர்ணேஸ்-லீ. இவற்றை ஒவ்வொன்றாக சற்று ஆராய்வோம்.

எமது அந்தரங்கத் தகவலைப் பேணும் ஆற்றலை இழந்து விட்டோம்

இன்று Yahoo, Target போன்ற பெரிய நிறுவனங்களின் மின்வலைய தகவல்களும், வங்கித் தகவல்களும் களவாடப்பட்டன என்று வாசித்தவாறுள்ளோம். பாதிக்கப்பட்ட பலருக்கும் இது தலையிடியாக இருப்பினும், இது போன்ற விடயங்கள் இன்று பெருகி வருகின்றன.  ஆயினும் இதைவிட ஆழமான பின்னணிக் கொள்ளை தினமும் நடைபெறுவதை அறிவீர்களா?

மின் வலயம் ஆரம்பக் காலத்தில் பிரதானமாக பொது நலம், அறிவியல் மேம்பாடு கருதி அரசாலும், கல்விக் கழகங்களாலும், ஆராய்ச்சிக் கூடங்களாலும் அமைக்கப்பட்டன. இவை மக்களின் வரிப்பணத்திலிருந்து உருவாக்கப்பட்டவை. இந்நிலை சிறிது சிறிதாக மாறிவருகிறது.  ஒரு காலத்தில்  மக்கள் வரிப் பணத்தில்  இருந்து உருவாக்கப்பட்ட மின் இணையத்தை  இன்று கூறுபோட்டு, பங்கு போட வந்துள்ளனர்  பதுங்கு பங்காளிகள் பலர். ஒவ்வொரு நுகர்வோர் மின்வலயத் தொடர்பு பற்றிய தகவல்களும் உள்ளூர் தொலைபேசி,கேபிள் இணைப்புக் கம்பெனிகளில் இருந்து, சமூகவலயங்கள் வரை பங்கு போட்டு விற்கப்படுகிறது.

வர்த்தக உலகில் வசீகரமான யாவும் இலவசமே இல்லை.  தமிழில் உள்ள பழமொழியொன்று இவ்விடம் ஞரபகத்திற்கு வருகிறது பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். தாசியானால் என்ன, தரித்திரனானால் என்ன தனியுரிமை, தனியுடமைத் தகவல்களைத் தவறாது தராவிட்டால் தயவே கிடைக்காது. இது அடிப்படையில் மின் வலய நோக்கை முறிக்கிறது, நுகர்வோரிற்குப் பாதகம் என்கிறார் தாபகர் திரு ரிம் பேர்ணேஸ்-லீ அவர்கள்.

இதன் உண்மையை அறியாதவர்கள், புறக்கணித்தவர் பலர், அறிந்தவர்கள் சிலர். எனினும் யாவரும் “இலவசம்” என்ற வர்த்தகப் புருடாவினால் (scam) தமது அந்தரங்கத் தகவல்களைத் தகவல் சந்தையில் விற்க வழிவகுத்தவாறு தான் உள்ளனர், எமது அந்தரங்கத் தகவல்கள் பல வர்த்தக மையங்களில் (business silos) தேங்கியுள்ளன. அவை நாம் அறியாமலே பல மடங்கு விலையில் ஏலத்திற்குப் போகின்றன. இவை வெள்ளை,மண்ணிறம், கறுப்புப் பட்டியல்கள் என பலவிதமாகச் சட்டத்திற்கு உள்ளும், வெளியிலும் தனிப்பட்ட வர்த்தக ஆதாயங்களிற்காக விற்கப்பட்டு வருகின்றன.

நாம் இதை அடிப்படை பண்டமாற்றுப் பெறுமதி ரீதியில் பார்த்தாலும் இதில் தொற்பவர் மின்வலய நுகரவோரே. பணக் கொடுக்கல்  வாங்கல் பெறுமதி என்று பார்க்கும் போது தற்போதய மின் வலய , சமூக வலய நுகர்வோர்கள் தமது அந்தரங்க தனியுடமைத் தகவல் பெறுமதியை அறியாமல் உள்ளனர். பெறுமதியான தமது தனியுடமைத் தகவல்களைத் தெறிக்க விட்டு, போதை வஸ்து போன்ற சொற்ப பலனையே மின்வலசேவை மூலம்  பெற்று வருகின்றனர். இது தேடல் இயந்திரமாகிய கூகிள் ஆக இருக்கட்டும், ஃபேஸ்புக்   போன்ற சமூகவலயமாக இருக்கட்டும், இல்லை இடைநிலை அக்சியம் Axiom, நீல்சன் Nielson போன்ற வர்த்தகத் தரகர்களாக இருக்கட்டும், நுகர்வோர் அந்தரங்கத் தகவல் பெறுமதி கட்டி காக்கப்படும் இரகசியம்.

ஆயினும் இலவம் பஞ்சில் ஊசியை ஏற்றுவது போன்று மெதுவாக, வேதனையின்றி நுகர்வோராகிய எமது தனியுரிமை தொடர்ந்து வர்த்தக நிபந்தனைகளாகத் (Terms & Conditions) தட்டிப் பறிக்கப்பட்டவாறே உள்ளன.

தொடரும்

தொகுப்பு – யோகி

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad