மினசோட்டாத் தமிழர்கள் பல்தேசகொண்டாட்டத்தின் மத்தியிலே மங்கள மத்தாப்பு
செயின்ட் பால் நகர ரிவர் சென்டரில் நாதஸ்வர கானம் தனியாகத் தமிழன் செவிக்குச் செழிப்பைத் தருகிறது. அதனுடன் வருகை தந்த யாவரும் அவர் இதயத் துடிப்புடன் இன்பமாக இணைகிறது இனிய தவில் மேளம், அதி உற்சாகத்துடன் கால்களைச் சும்மா ஒரிடத்தில் நின்று பார்க்காமல் துள்ள வைக்கிறது ஆடி அடிக்கும் தமிழ்ப்பறை வித்தகர் அருகில் கூடிக் குதிக்கிறார்கள் இளம் நாட்டியத் தம்பதிகள்.
ஏறத்தாழ 90 சமூகங்களில் 30 மேற்பட்ட சமூகக் கண்காட்சிக் கூடாரங்களில் தமிழர் கூடாரத்தின் கும்மாளம் வருவோர் யாவரையும் ஈர்த்து விட்டது. அருகே இந்திய, சீன, இலங்கைக் கண்காட்சிக் கூடாரங்கள் அமைந்திருந்தன எனினும் பொங்கு தமிழ் பொழிந்து பரவியது பாங்கான தமிழ்ச் சங்கத்தார் பகுதியில் .
மினசோட்டாவில் தமதுச் சமூகம் கலாச்சார அவைகள், கொண்டாட்டங்கள், கோயில்கள், தேவாலயங்கள் தாண்டித் தமிழர் அமெரிக்க பொதுசன மேடைகளிலும் தமிழ்க் கலாச்சாரத்தைக் கலந்து பரவுவது மினசோட்டா வாழ் தமிழருக்கும் பெருமை தரும் விடயம்,
சென்ற பத்து வருடங்களிற்கு மேல் பார்வையாளனாகப் பங்கு பெற்று வரினும் தமிழர் தனித்துவம் சென்ற இரண்டு ஆண்டுகளாக மாநிலப் பொது அவையிலும் பிரபலம் அடைந்து வருவது மகிழ்ச்சிக்கு உரிய விடயமே. தொடர்ந்து தமிழ்ப் படைப்பாளிகள் படைத்து மங்கள மகிழ்ச்சிகரமாக மருகிட எமது மனதார்ந்த வாழ்த்துக்கள்.
ஊர்க்குருவி