\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நிச்சயமாய் வந்துசேரும் !!

வானில் பறக்கும் விஞ்ஞானிக்கும்
வனத்தில் திரியும் மெய்ஞ்ஞானிக்கும்

தானில் என்றலையும் தருக்கருக்கும்
தனக்கென ஒன்றிலாத் தவமுனிக்கும்

ஆலயம் வழிபடும் அன்பருக்கும்
அங்கொன்றும் இலையெனும் அனைவருக்கும்

பாலமாய்ச் செயல்படும் பண்பாளருக்கும்
பலமாய் வெடிவைத்தே தகர்ப்போருக்கும்

நாட்பல கடந்திடினும் நினைப்போருக்கும்
நன்றியில் பழையதை மறப்போருக்கும்

சீரிய வாழ்வினில் திளைப்போருக்கும்
சிரிப்பது போதுமென்று இருப்போருக்கும்

வாழிய எனப்பாடும் நல்லவருக்கும்
வளமெண்ணிப் பொறையுறும் அல்லவருக்கும்

மாளாமல் செல்வங்கள் சேர்த்தோருக்கும்
மகவுக்குப் பாலில்லா வறியவருக்கும்

காலங்கள் கடந்திட்ட முதியோருக்கும்
கட்டுடல் மாறிடாக் காளையருக்கும்

மாறாமல் என்றுமே தொடர்ந்திருக்கும்
மரணமெனும் பெருநிலையே நிச்சயமாம் !!!

– வெ. மதுசூதனன்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad