\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கிராமத்துக் காதல் ….!!

ஏருபுடிச்ச மச்சானே !
மனசுல காதலை
வெதைச்சவரே !
இந்தப் பூங்குயிலை
ஏரெடுத்துப் பார்த்திடுங்க …
பொத்தி வெச்ச ஆசையிங்கே
அருவியா கொட்டு்துங்க….

ஒங்க நெனப்பில் மச்சானே
துவச்ச துணியைத் தான் துவச்சேனே…
இதுதான் சாக்குன்னு …என்னாத்தா
வாயார திட்டித்தீர்த்தாளே …
புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு சொன்னாளே…
பேதலிச்சது புத்தியா? மனசா ?
எல்லாமறிஞ்ச மச்சானே
சட்டுனுதான் சொல்லிடுங்க …

வெரசா வாரேனு சொல்லிப் போனீக
வருசம் மூணாச்சு !
எங்கழுத்தில் தாலி ஒன்னைக் கட்டிடுங்க
குலசாமியா வைச்சு கும்பிடுறேனுங்க …
ஒங்க நெனவு தொண்டைக்குழில
மூச்சையுமே அடைக்குதுங்க …..
அப்படியே பேச்சையும் தான் குறைக்குதுங்க ….

போற உசிரைப் புடிச்சு வெச்சு
போக்கத்துக் காத்திருக்கேன்..
ஓலையிலே சேதி சொல்லாம
ஓடை தாண்டி வந்திடுங்க….!
உசுருக்கு உசுராக
ஊரு மெச்ச வாழ்ந்திருப்போம்…!!

உமையாள்

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad