\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினியாப்பொலிஸ்  நகரத்தைச் சுற்றியுள்ள பார்வை இடங்கள்

மினியாப்பொலிஸ் நகரத்தில் இருந்து இலகு ரக  ரயில் (light-rail), பேருந்து bus மூலம் சென்று பார்வையிடக் கூடிய இடங்கள்

(1) DOWNTOWN ST. PAUL
இலகு ரக  ரயில் – GREEN LINEஐ 5ஆவது தெருவிலிருந்து . எடுத்துக்கொள்ளவும்

(2) EAT STREET 

சுமார் 55 க்கும்  மேற்பட்ட உணவகங்கள், நிகொலேட் அவென்யுவின்  20 குறுக்குத் தெருக்களில் காணப்படுகின்றன . இவ்விடம் போவதற்கு 3ஆவது அவென்யூ, 2 ஆவது அவென்யூவிலிருந்து  பேருந்து எண்கள் 17 அல்லது 18இல் ஏறிக்கொள்ளலாம்.  

 

 

(3) FIRST AVENUE
இது பிரபலமான  இரவுநேர கேளிக்கை விடுதிகளையும், அத்துடன் உள்ளூர், வெளியூர் இசைக் கலைஞர்களின் இசை மேடைகளையும் கொண்ட பகுதி. இதற்கு பேருந்து எண்கள்  5, 19, 22 அல்லது 94ஐ  எடுக்கலாம்.

 


மேலும் விருந்தாளிகளும், உள்ளூர் மக்களும் இலவச பேரூந்து சவாரிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இலவச சவாரி (Free Rides) என்ற அறிவுப்பு உள்ள பேருந்துக்களை மார்கெட், 2அவது அல்லது 3ஆவது  அவென்யூவிலிருந்து  எடுத்து கிராண்ட் தெரு,  வாஷிங்க்டன் அவென்யூ  இடையே பயணிக்கலாம்.

 

(4) GREYHOUND AND JEFFERSON LINES STATION
இது நகரங்களிடையே பயணப்படும் இணைப்பு பேருந்துக்களின் தரிப்பிடம்.
இங்கு செல்ல  ஹெனப்பின் அவென்யூ, 5, 19 , 22 எண் பேருந்துகளிலோ ஏழாவது தெருவிலோ ஏறிக்கொள்ளலாம்.

 

(5) MALL OF AMERICA
இதை  அமெரிக்க நுகர்வோர் கேளிக்கைச் சரணாலயம் எனக் குறிப்பிடலாம். இங்கு 500 மேற்பட்ட கடைகள் ஓரே கூரையின் கீழ் உள்ளன.  இங்கு போய் வர இலகு ரக ரயில் எடுப்பது சுலபமான விடயம். ஐந்தாவது தெருவிலிருந்து  BLUE LINE இல்  ஏறிக்கொள்ளலாம்.

மால் ஆஃப் அமெரிக்கா Mall of America

 

(6) MINNEAPOLIS CONVENTION CENTER
மினியாப்பொலிஸ் மாநாட்டு அரங்கு. இவ்விடம் , ஜுலை 1, 2 தேதிகளில் 2017 வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் 30ஆவது தமிழ் விழா நடைபெறுகிறது. இவ்விடம் போக 10, 17, 18, 25, அல்லது  59 எண் கொண்ட பேருந்துக்களை எடுக்கலாம்.

மினியாப்பொலிஸ் மாநாட்டு அரங்கு Minneapolis Convention Center

 

(7) MINNEAPOLIS INSTITUTE OF ARTS(MIA)/ CHILDREN’S THEATRE COMPANY (CTC)
MIA அகில உலகப் புகழ் பெற்ற இடம். இவ்விடம் குழந்தைகளுக்கான சிறப்பான நாட்டிய,நாடக, பதிப்பு நூதனசாலை மற்றும்  திரையரங்கும் உன்டு. இங்கு போக 11A எண் பேருந்தில் மூன்றாவது  தெருவிலிருந்து  ஏறிக் கொள்ளலாம்.

 

(8) MINNEHAHA FALLS PARK
இது மினியாப்பொலிஸ் நகரின்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பிரபல நீர்வீழ்ச்சி அமைந்த பூங்கா.  இங்கு வாடகைக்கு மிதி வண்டிகள்  

பெற்றுக் கொள்ளலாம். இங்கு போக ஐந்தாவது தெருவிலிருந்து இலகு ரக  ரயிலில் ( BLUE LINE) ஏறிக்கொள்ளலாம்.

மினஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha falls)

 

(9) MSP INTERNATIONAL AIRPORT மினியாப்பொலிஸ் செயிண்ட்பால்  சர்வதேச விமான நிலயம்

இந்த விமான நிலயம் உண்மையில் Bloomington எனும் அண்டை நகரில் அமைந்துள்ளது. இங்கிருந்து மினியாப்பொலிஸ் போக இலகு ரக ரயில் (Blue Line) எடுத்துக்கொள்ளலாம். இந்த ரயில் சேவை இரு விமானத் தரிப்பிடங்களையும் (Terminal 1 – Lindbergh மற்றும் Terminal 2 – Humphrey)   இணைக்கும். இங்கு வர,  மினியாப்பொலிசில் ஐந்தாவது  தெருவிலிருந்து  BLUE LINE ரயிலில் ஏறிக் கொள்ளலாம்.

 

(10) STATE CAPITOL (ST. PAUL) தலைநகர்


மினசோட்டா மாநிலத்தின் தலை நகர் செயிண்ட் பால் ஆகும். இங்கு மிகவும் அழகிய அரசு மாளிகை மற்றும் வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  பல கட்டிடங்களும், மற்றும் தலங்களும் காணப்பெறும். மேலும் அரசமாளிகைக்குப் போக அங்கிருக்கும்  வரவேற்பாளர்கள் இடத்தைச் சுற்றி காட்டி உதுவுவார்கள். இங்கு போக இலகு ரக ரயில் GREEN LINE ஐ ஐந்தாவது தெருவில் எடுக்கலாம்.

கிறீன்லைன் – சிறிய மீ-கொங் (Little Mekong)

 

(11) TARGET CENTER
இது மினசோட்டா மாநில கூடைப்பந்து அணிகளான Timber wolves மற்றும் Lynx இன்  பயிற்சி மற்றும் விளையாட்டு அரங்கமாகும். மேலும் ஆண்டு முழுதும் இவ்விடம் பலவிதமான இசை மற்றும்  கேளிக்கைகளும் நடைபெற்றவாறு இருக்கும்.

பேருந்தில் போவதானால் ஹெனிப்பன் தெருவிலிருந்து தடம் எண்கள் 5, 19, 22 இல் ஏறிக்கொள்ளலாம். இலகு ரக ரயிலில் போக விரும்பினால் BLUE LINE  or GREEN LINE ஐ ஐந்தாவது தெருவில் ஏறி, Warehouse District/Hennepin Ave நிலையத்தில்  இறங்க வேண்டும்.

 

(12) TARGET FIELD
இது மாநில Minnesota Twins பேஸ்போல் ஆட்டக்குழுவினரின் விளையாட்டு  மைதானம். இங்கு போய் வர இலகு ரக ரயில் BLUE LINE  அல்லது GREEN LINE ஐ ஐந்தாவது தெருவில் எடுக்கலாம்.

 

(13) UPTOWN
இது படைப்பாளிகள், மற்றும் பல்வகைச்  சமூகங்களினால் கூடியமைக்கப்பட்ட சுவாரஸ்யமான பகுதி. இங்கும் பலரக உணவகங்களும், திரை, மற்றும் இசையரங்குகளும் காணப்படும்.

இங்கு சென்று வர பேருந்து தட எண் 17 ஐ 3ஆவது, 2ஆவது தெருக்களில் . ஏறலாம். மேலும் 6 மற்றும் 12 தடம் எண் தாங்கிய பேருந்துகளை ஹெனிப்பின்  தெருவிலிருந்து பிடிக்கலாம்.   

(14) WALKER ART CENTER AND SCULPTURE GARDEN
இது அமெரிக்க நாட்டின் நவீன, நாளாந்த கலைப்படைப்புக் கண்காட்சி ஆலயம் ஆகும்.  இங்கு போக தடம் எண்  4, 6 அ 12 பேருந்துக்களில் ஹெனிப்பின் தெருவிலிருந்து ஏறிக்கொள்ளலாம்.

 

(15) WEISMAN ART MUSEUM/ UNIVERSITY OF MINNESOTA
இது மினசோட்டா பல்கலைக்கழகம் சார்ந்த கலைப்படைப்புக் கண்காட்சிச் சாலையாகும். இங்கு 20ம் நூற்றாண்டு தொடங்கி அமெரிக்காவின்  ஆரம்பகாலப் படைப்பாளிகள், கலைஞர்களின்  ஆக்கங்கள் பலவும் காணப்படும். இது பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது.

இங்கு போக இலகு ரக ரயில் GREEN LINE ஐ ஐந்தாவது தெருவிலிருந்து  எடுக்கலாம்.

 

மெது ரயில் light rail பயணிப்பு அவகாசங்கள் Travel Times:

 

Downtown Minneapolis ………………..23 நிமிடங்கள் ………….. Terminal 1 –Lindbergh

Downtown Minneapolis ………………..25 நிமிடங்கள் …………….Terminal 2 – Humphrey

Downtown Minneapolis ………………..35 நிமிடங்கள் ……………..Mall of America

University of Minnesota ………………..10 நிமிடங்கள் ……………. Downtown Minneapolis

Downtown Minneapolis …………………45 நிமிடங்கள் ……………..Downtown St. Paul

 

தொகுப்பு – ஊர்குருவி

 

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad