\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அ முதல் ஃ வரை …!

Filed in இலக்கியம், கவிதை by on June 26, 2017 0 Comments

அ- அதிசயிக்க மறந்துவிட்டேன்
அதிசயமே நீ என்பதால்

ஆ- ஆர்ப்பரிக்க மறந்துவிட்டேன்
அலைகடல் நீ என்பதால்

இ- இரவை ரசிக்க மறந்துவிட்டேன்
என் நிலவே நீ என்பதால்

ஈ – ஈகை செய்ய மறந்து விட்டேன்
ஈகையின் இருப்பிடம் நீ என்பதால்

உ- உலகைக் காண மறந்துவிட்டேன்
என் உலகமே நீ என்பதால்

ஊ- ஊஞ்சலில் ஆட மறந்துவிட்டேன்
என் தென்றல் நீ என்பதால்

எ- எழுதுகோலைப் பிடிக்க மறந்துவிட்டேன்
என் இறகு நீ என்பதால்

ஏ- ஏட்டைப் படிக்க மறந்துவிட்டேன்
ஏடே நீ என்பதால்

ஐ – ஐயமிட மறந்து விட்டேன்
உன்னிடம் யாசகனாகிப் போனதால்

ஒ – ஒலியை மறந்துவிட்டேன்
சப்தங்கள் நீயாகிப் போனதால்

ஓ – ஓவியத்தை மறந்துவிட்டேன்
பிம்பமே நீயாகிப் போனதால்

ஔ – ஔடதத்தை மறந்துவிட்டேன்
ஔடதமே நீயாகிப் போனதால்

ஃ – ஆயுதத்தை மறந்துவிட்டேன்
உன் விழியே எனதாகிப் போனதால்…

உமையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad