உலகச் செம்மொழி – அத்தியாயம் 2
(முதல் அத்தியாயம் செல்ல இங்கே சொடுக்கவும்)
நாம் தமிழகத்து சாலைகளில் செல்லும் போது இரு பக்கமும் உள்ள சுவற்றில் ”வீரபாண்டியார் அழைக்கிறார்”, ”நெல்லையார் அழைக்கிறார்” அப்படீன்னு பலப்பல ”ஆர்” அழைக்கிறதைப் பாத்து இருப்பீங்க. பாத்ததோட இல்லாம அவங்களை நினைச்சி சிரிச்சிட்டும் போய் இருப்பீங்க. தமிழில் “ஆர்” என்ற விகுதி ஒருவரை உயர்த்திக் குறிப்பிட பயன்படுகிறது. அது சரி sir. இப்ப எதுக்கு என்கிட்ட தமிழ் இலக்கணம் சொல்லுறீங்கனு கேக்கறீங்களா? இந்த “ஆர்” க்கு முன்னாடி ஒரு “ஸ்” சேத்துப் பாருங்க….
ஸ் + ஆர் =ஸ்ஆர் = sir
நாகம் என்பது பாம்பைக் குறிக்கும் தமிழ்ச் சொல். இதை வட மொழியிலோ அல்லது வடக்கே உள்ள பேச்சு மொழியிலோ ’நாகு’ அல்லது ’நாக்’ னு சொல்லுவாங்க. இப்ப நீங்களே கண்டுபிடிச்சிருப்பீங்க snake எப்படி வந்ததுனு.
மொழிவளர்ச்சி தொடர்ச்சிகளின் பல்வேறு நிலைகள் என்னென்ன என்று . தேவநேயப் பாவாணர் ஐயா கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
(1.) அசைநிலை (Monosyllabic),
(2.) புணர்நிலை (Com-pounding)
(3.) பகுசொன்னிலை (Inflexional)
(4.) திரிநிலை,
(5) கொளுவுநிலை (Agglutinative),
(6.) தொகைநிலை (Synthetic),
(7.) சிதைநிலை
இது எதுவும் புரியலைனாலும் கவலைய விடுங்க. நாம இந்த தொடர்ல பாக்கப் போற வார்த்தைகளை வச்சி விளக்கி சொல்லிக்கிட்டு வர்றேன். அப்ப உங்களுக்கு புரிஞ்சிடும்.
இந்த பாம்பு பத்தி பேசினதுனால அதை பத்தி மேலும் சில தகவல்களை சொல்லிடலாம்னு தோணுது.
தமிழர்களை தெலுங்கர்கள் நாகர்கள் என்ற பொருளில் அரவாலுனு கூப்பிடுவங்க. அரவன் போக்கு அம்போக்கு என்ற சொற்பதங்கள் அவர்களால் சொல்லப்படுகின்றது.
அரா என்ற பதம் பாம்பைக் குறிக்கும் மற்றொரு சொல்.
கோ – தலைவன் அல்லது மன்னன் என்று பொருள்
கோ + அரா என்பது kobra ஆங்கிலத்துல திரிந்தது.
சாரை + பாம்பு என்பது சர் + பா = ஸர்பா என்று வடமொழியிலும் serpentஎன்று ஆங்கிலத்திலும் திரிந்தது.
Kobraவும் serpentம் மேலே கொடுக்கப்பட்ட ஏழு மொழிவளர்ச்சி வகையில் எப்படி உருவானது என்றும் அடுத்த அத்தியாயத்தில் பாக்கலாம்
– சத்யா