\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இந்தியா ஃபெஸ்ட் 2017 (India Fest)

 

இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) வருடம் தோறும் இந்தியச் சுதந்திரத் தினத்தையொட்டி மினசோட்டாவில் வசிக்கும் இந்தியர்களையும், இந்திய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மினசோட்டா ஸ்டேட் கேப்பிடல் (State Capitol) மைதானத்தில் நடத்தும் இந்தியா ஃபெஸ்ட் (India Fest) நிகழ்வு, இந்தாண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று வெகு விமரிசையாக நடந்தது.

அன்றைய தினம் வெளிப்புற நடமாட்டத்திற்கு ஏற்ற தட்பவெப்பம் அமைந்திருந்தது, இந்த நிகழ்வுக்குச் சாதகமாக இருந்தது. காலை பதினொரு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாமன்றக் கட்டிடத்தின் முன்பாக மேடை அமைத்து, அதில் கலை நிகழ்ச்சிகள் நடந்தேறின. ஒவ்வொரு இந்திய மாநிலத்தின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் கலை நிகழ்ச்சிகளாக அவை அமைந்திருந்தன.

இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும்  உணவு, உடைகள், அணிகலன்கள் போன்றவை விற்கப்பட்டன. இந்திய வம்சாவளியினர் மட்டுமல்லாது, பிற அமெரிக்க இனக்குழுக்களும் இந்தியக் கலாச்சாரத்தைக் கண்டு மகிழும் நிகழ்வாக இது அமைந்தது.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில, இங்கு உங்கள் பார்வைக்கு.

India Fest – 2017

 

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad