நாமும் நமது மினசோட்டாச் சூழலும்
வாருங்கள் நாம் ஒரு சூற்றாடல் சாகச ஆய்விற்குச் செல்வோம். நாம் மினசோட்டா மாநிலத்தில் வசிப்பவர்கள் என்றால் எமக்கு இவ்விட ஏரிகள், பூங்காக்கள் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். இனி இதை சற்று விபரமாக அறிந்து கொள்வோம்.
நீங்கள் மினசோட்டா மாநிலத்தில் எங்கு வாழ்ந்தாலும் ஒரு இயற்கைப் பூங்கா உங்கள் அருகில் இருக்கும். நமது மாநிலத்தில் 67 பூங்காக்கள் உண்டு. அதேசமயம் உல்லாசமாக 62 கூடாரம் போட்டு சமைத்துச் சாப்பிட, ஏரிகள் ஆறுகளில் நீந்தி விளையாட எமக்கு வசதிகளும் உண்டு.
State Parks | 67 |
Recreation Areas | 9 |
Wayside Parks | 9 |
State Trails | 13 |
Forest Campgrounds | 62 |
மினசோட்டா மாநிலம் வட அமெரிக்கக் கண்டத்தின் 3 விதமான வனவகை இயற்கை நிலப்பரப்புக்களையும் கொண்டு அமைந்துள்ளது.
அவையாவன
- Prairies – பிரேயரிஸ் புற்றரைப் பிரதேசம்
- Hardwood Forrests – கடின மரக்காட்டுப் பிரதேசம்
- Pine Forrests – ஊசியிலை மரக்காட்டுப் பிரதேசம்
Prairies – பிரேயரிஸ் புற்றரைப் பிரதேசம்
எமது மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதி பிரதானமாக புற்றரைகளும், சிறு பற்றைச் செடிக் காட்டுப்பூக்களையும் கொண்டு காணப்படும் பிரெயெரிஸ் புற்றரையானது மாநிலத்தின் மேற்குப் புறத்தில் காணப்படுகிறது. இவ்விடம் ஒருகாலத்தின் தலைக்கு மேல் உயர்ந்த பெரும் நீலத் தண்டு “Big Blue Stem”, இந்தியன் புல்லு “Indian Grass” எனப்படும் புற்களும், மற்றும் குட்டை வகையான புற்களும் கண் எட்டும் தூரம் வரை கடல் போல் பரவியிருந்தது.
பூர்விகவாசிகள் வசித்து வந்த இடத்தில், ஐரோப்பியக் கூடி புகுதல் காரணமாக புற்றரையை உழுது பயர்ச்செய்கை நிலமாக மாற்றப்பட்டது. இதனால் ஏறத்தாள 99 சதவீதமான பிரேயரிஸ் புற்றரைகள் மாற்றியமைக்கப்பட்டு விட்டன. இன்று விவசாயத்தினால் மாநிலத்தின் 1 சதவீத நிலப்பரப்பே இயற்கையான பிரேயரிஸ் ஆகக் காணப்படுகிறது.
Hardwood Forrests – கடின மரக்காட்டுப் பிரதேசம்
மினசோட்டா மாநிலத்தின் நடுப்பகுதியூடு ஊடுருவிச் செல்லும் காடு கடின மரக்காடுகளாகும். இந்த நிலப்பரப்பு ஓக், மேப்பிள், எல்ம், மற்றும் பாஸ்வுட் போன்ற வலுவான மரங்களைக் கொண்டுள்ளது. இந்தக் காடு இலையுதிர் காலத்தில் கொள்ளையளகை தமது பிரகாச சிவப்பு “Crimson”, செம்மஞ்சள், மெருகூட்டும் மஞ்சள், கருமஞ்சள் மற்றும் ஜொலிங்கும் தங்கம் போன்ற பிரகாசமான இலைக்காட்சிகளைத் தரும்.
இவ்விடம் கடினமரக்காடுகள் என்று அழைக்கப் படுவதன் காரணம் இந்தப் பிரதேச மரங்களை இலகுவாக வெட்டித் தறிக்கமுடியாதவையாகும்.
Pine Forrests – ஊசியிலைக் காட்டுப் பிரதேசம்
உயரமாக வளரினும் ஊசியிலை மரங்கள் ஒப்பீட்டளவில் மெது மரமாகும். மினசோட்டா மாநிலத்தின் அழகு ஏரிகளின் பின்னணியில் எடுக்கப்படும் படங்கள் அனேகமாக ஊசியிலை மரக்காடுகளேயாகும். ஊசியிலை மரக்காடுகளே பொதுவாக எமது மாநிலத்தில் பாதிக்கப்படாதவை எனலாம். ஊசியிலைக்காடுகள் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் சுமார் மூன்றி்ல் ஒரு பகுதிப் பரப்பினைக் கொண்டுள்ளது.
பாரிய ஸ்புரூஸ் “Spruce”, வெள்ளை, சிவப்புப் பைன் “Pines” மரங்கள் மாநில ஊசியிலைக்காட்டு உதாரணங்கள் ஆகும். இந்தப் பைன் மரங்காடுகளில் பல அபூர்வமான ஓக்கிட் வகைகள், மற்றும் பூச்சிகளை உண்ணும் தாவரங்களையும் குட்டைப் பகுதிகளில் கண்டு கொள்ளலாம்.
- தொகுப்பு யோகி –