\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆழ்மன ஆசைகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on December 24, 2017 0 Comments

காலையில் எழுகையில் கருத்தெலாம் கடவுள்
காரிருள் குவிகையில் கனவெலாம் காதல்!
வைகறை மலர்கையில் வாய்முழுக்க மந்திரம்
வானிலொளி மறைகையில் வாய்த்திடும் மன்மதம்!

விடிந்து எழுகையில் விதைத்திடும் ஆக்கம்
விலக்கிய போர்வையில் விளைந்திடும் ஏக்கம்!
பகற்பொழுது பார்க்கையில் பெண்மையொரு யாகம்
படுக்கையில் இருக்கையில் பாழ்மனமெங்கும் மோகம்!

மேடையில் முழங்குகையில் மேதாவியாய் வாதம்
மேலாடை விலகுகையில் மேன்மையிலாக் காமம்!
ஆண்களின் உள்ளமது ஆசைகளின் இருப்பிடம்
ஆழ்மன அழுக்குகள் ஆராய்வது அவசியம்!!

   வெ. மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad