தெய்வத் தமிழிசை
“மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் பகவான் கிருஷ்ணரே கூறி இருப்பதை நாம் அறிவோம். மார்கழி என்றாலே , அதிகாலை நேரம், கோயில் மணிகள், வண்ண வண்ணக் கோலங்கள், சூடான பொங்கல், மெல்லிய பனி, கச்சேரிகளோடு காற்றில் கலந்த சங்கீதம்மற்றும் பக்தி இவைதான் நமக்கு நினைவில் வருவது.
மினசோட்டாவின் இந்த ஆண்டு மார்கழியும் அது போலவே. முழுப் பனி, சூடான பொங்கல், காற்றில் கலந்த சங்கீதம் மற்றும் பக்தியே.
லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி ” (Global organisation of divinity) இணைந்து நடத்தி வரும் spirits of margazhi 2018 “தெய்வத் தமிழ் இசை நிகழ்ச்சி” மினசோட்டாவில் கோலாகலமாக நடந்து வருகிறது. மினசோட்டாவின் முழுப் பனியிலும் , கச்சேரியும் பக்தியும் நமக்கு இறைவனை அகத்தில் கொண்டு வருகின்றன.
முதல் வாரம் டிசம்பர் 16 ம் தேதி அன்று நடந்த நிகழ்ச்சியில் சங்கீத உபன்யாசக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. “என்னும் திருநாமம் நிண்ணம் நாரணமே ” என்று நாம மஹிமை பற்றிப் பாடிய திருமதி சுபாப்ரியா ஸ்ரீவத்சன் அவர்களின் தெய்வீக இசையில் மனம் உருகிக் கரைந்தது.
இரண்டாவது வாரம் டிசம்பர் 23 ம் நாள் நடந்த “பரத நாட்டிய நிகழ்ச்சி ” சுருதி மாறும் நிருதி இருவரின் அபாரமான நடனம் பக்திக்குக் கண் முன் வடிவம் தந்தது போல் அமைந்தது. “கோல மயில் வாகனனே” என்று மயில் போல ஆடிய பொழுதும், “எல்லாம் நீ சொல்லித் தந்தது தானே ” என்று பணிவோடு வணங்கிய பொழுதும், நமது மனதைக் கொள்ளை கொண்டார்கள் .
காரணம் இன்றி கருணை பொழிந்தாய்
காரணம் இல்லாத பக்தியைத் தந்தாய்
காரணம் இன்றி உலகில் உழன்ற எனக்கு – ஜகத்
காரண கண்ணன் திருவடி தந்தாய்
என்ற குருவின் வரிகளில் வருவது போல, இந்தத் தெய்வத் தமிழ் விழாவில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் இறைவனின் திருவடியை அடையும் பலன் அமையும்.
டிசம்பர் 30 ம் தேதியும், ஜனவரி 6 ம் தேதியும், ஜனவரி 13 ம் தேதியும் அடுத்து வர இருக்கும் மார்கழி மாச “தெய்வத் தமிழ் இசை” நிகழ்ச்சியை பற்றி மேலும் விவரங்கள் தெரிய கீழே இருக்கும் முகநூலில் பார்க்கவும்.
https://www.facebook.com/MinneapolisGodSatsang/
– லட்சுமி சுப்பு
Tags: Margazhi, MinneapolisGodSatsang, மார்கழி