\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பூனை

Filed in கவிதை, வார வெளியீடு by on December 31, 2017 0 Comments

காலத்தை வெல்ல வேண்டுமே !
கால்களில் காகமும் குருவியும் —

காலையில் கிழக்கு நோக்கி
பணிக்குப் பறக்கும் தந்தை –

வேகுமோ அரிசியும் பருப்பும்
வேகத்தில் நடக்கிறது சமையல் –

அவகாசம் கொடுக்காத அவசரம் –
வேலைக்கு நேரமாகிறதே –
மேற்கே பறக்கும் தாய் –

ஓ ! குட்டிப்பூனையே !
அந்தக் குழந்தையிடம்
அன்பு காட்ட ,
பாசம் பொழிய ,
உன்னைத்தவிர யாரிருக்கார்
இந்த பொருள்சார் உலகில் ?

–         கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி — MD DNB PhD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad