\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா

1885 ஆம் ஆண்டு ஒரு நியூயார்க் பத்திரிக்கையில் செயிண்ட் பாலை (Saint Paul) குளிர்காலத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற இடம் என்று ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டு எழுதியிருந்தாராம். உடனே ரோஷம் கொண்ட செயிண்ட் பால் மக்கள் வாழ்வதற்கான தகுதி மட்டும் அல்ல, கொண்டாட்டத்திற்கும் இது ஏற்ற இடம் எனச் சூளுரைத்துத்தொடங்கியது தான் இந்தச் செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா (Saint Paul Winter Carnival). 1886 இல் இருந்து ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திருவிழா, இரண்டாம் உலகம் போர் போன்ற காரணங்களால் சில வருடங்கள் நடக்கவில்லை. மற்றபடி, இது தொடர்ந்து எந்தத் தடங்கலும் இல்லாமல் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கிப் பிப்ரவரி 10 ஆம் வரை இவ்விழா நடந்தது. இதே சமயத்தில் சூப்பர் போல் (Super Bowl) விளையாட்டுப்போட்டியும் மினியாபொலிஸில் நடைப்பெற்றதால், வெளியூரிலிருந்து வரும் விருந்தினர்களுக்காக மேலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியின் ஹைலைட் இங்கு ஐஸ்கட்டிகளால் எழுப்பப்படும் பிரமாண்ட மாளிகை. இதற்காக க்ரீன் லேக் ஏரியில் இருந்து ஐஸ் கட்டிகள் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு, இங்குக் கொண்டு வரப்பட்டு மாளிகையாகக் கட்டப்படுகிறது. பிறகு, இந்த மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. இரவில் இது கண்கவர் வண்ணத்தில் ஜொலிப்பதைக் காண்பது சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கிறது.

இந்த மாளிகையைச் சுற்றிலும் பனிக்கட்டியில் உருவான சிலைகள் பல நிறுத்தப்பட்டுள்ளன. இசைக் கச்சேரி, உணவு, புகைப்படங்கள் எனக் குளிர்காலக் கொண்டாட்டம் மக்களின் பெருத்த ஆதரவுடன் இவ்வருடமும் சிறப்பாக நடந்து முடிந்தது.

  • சரவணகுமரன்.

நன்றி – விக்கிபீடியா

https://en.wikipedia.org/wiki/Saint_Paul_Winter_Carnival

 

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad