\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY 2018

இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின்149 ஆவது பிறந்த நாள் “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY)  என்று கொண்டாடப்பட்டது. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் இந்த நாளில் ஒரு பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவை இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும்  மினசோட்டாவில் உள்ள மற்ற இந்திய அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஸ்ரீவித்யா வைத்தியநாதன்  இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மினசோட்டா மாநில அமைப்பு சார்பில்  மாநில உறுப்பினர்களும் மற்றும் பல அமைப்பு தொடர்பான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ரவி சாகி நிகழ்ச்சியின் வரவேற்பு உரை வழங்கி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.  சயின்ஸ் ஆப் ஸ்பிரிச்சுவாலிடி (Science of Spirituality – SOS) குழுவினர் இறை வணக்கம் பாடி நிகழ்சியைத் தொடங்கினர். குச்சிப்பிடி நடனம், ஓடிசி நடனம் ஆகியவை நடைபெற்றன. மினசோட்டா மாநில அமைப்பு சார்பில்  மாநில உறுப்பினர்கள் மற்றும் பல அமைப்புத் தொடர்பான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மற்ற அமைப்புகளான ஜெயின் சொசைட்டி (Jain society), மிலன் மந்திர் (Milan Mandir), ட்வின் சிட்டிஸ் நான் வயலன்ஸ் நிறுவனம் (Twin-city Non-violence Organization), எஸ் ஓ எஸ் (SoS), மினசோட்டா இந்துக் கோவில் ஆகியவையும், உள்ளூர்ப் பிரபலங்களான Dr.ப்ருஸ் கோரி, Dr.டேஷ் போன்றோரும் கலந்து கொண்டனர்.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வாசகர்களின் பார்வைக்காக !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad