\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி?

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான  சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அறிந்து கொள்வது தான். அதாவது நாம் ஒரு கருமத்தைத் தெரிவு செய்யும் போது, இந்த விடயம் எமக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்வது  முக்கியம். வெளியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளினும், எமது மனதில் ஆழமான முக்கிய மதிப்பீடுகள் எமது அன்றாட வாழ்வில் எம்மை ஆட்கொள்கின்றன. இதை உணர்ந்து கொள்ளுதல் எமது காரியச் சித்தி, தோல்விகளிற்கு வழிவகுக்கின்றன.

நாம் தெரிவு செய்யும் காரியங்களும் எமது மனதின் அடிப்படை எண்ணங்களிற்குச் சாதகமாகும் பொழுது செய்யும் கருமம் இலகுவாகத் தென்படலாம். இதனால் செய்யும் காரியம் உண்மையில் கடினங்களை எதிர்கொள்ளினும் எமது உள் மனது உத்வேகம் (the inner drive),  குறித்த கருத்தை செய்து முடிக்க வெகுவாக உதவும். நாம் தேர்ந்து கொள்ளும் குறிக்கோள், எமது தனித்துவமான அடிப்படை மதிப்பீடுகளிற்கு மாறாக அமைந்தால் இதை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளாவிடின் பயனற்ற முயற்சியாக, செய்யும் காரியத்தை நடுவில் கைவிடும் வாய்ப்பு அதிகமாகும்.

ஆங்கிலத்தில் Core Values என்று கூறப்படும் எமது தனித்துவமான ஆழ்ந்த மதிப்பீடுகள் யாவை என்று நாமே  தெரிந்து கொள்ளுதல் முக்கியம். எமது ஆழ்ந்த மதிப்பீடுகள் தாம் எமது அடிப்படைச் சிந்தனைகள் (ideas), எமது வரையறைகள் (principles), கை முறைகள் (actions). மேலும் எமது ஆழ்ந்த மதிப்பீடுகளே நம்மைச் சூழ்ந்து கொள்ளும் நண்பர்கள், பங்காளிகள், குழுக்கள் போன்றவற்றை வாழ்வில் தேர்ந்தெடுத்துக்  கொள்ள உதவும். நாம் எமது வாழ்வில் முக்கியத்துவம் தரும் பெரும்பாலனவை எமது ஆழ்ந்த மதிப்பீடுகளைக் கொண்டே அமையும்.

இந்த அடிப்படைத் தேர்வை, ஒருவரின் சுயமான நிர்வாக மதிப்பீடு (govening value) எனலாம். இது எமது அன்றாட அணுகுமுறைகள் (Attitudes), கை முறைகள் (actions), எமது கரிசனை (level of interest) போன்றவற்றை ஆட்கொள்ளும்.

தகுந்த குறிக்கோளை அமைத்தல்

வாழ்வில் எடுக்கும் முயற்சி வெற்றிகரமாக அமைய எமது அணுகுமுறையில் அக்கறை வேண்டும். இதில் முக்கியமானது, நாம் தெளிவாக, எமக்கு முக்கியமானது எது என்று நிர்ணயித்துக் கொள்ளுதல். நாம் எதனை ஆழமாக மதிப்பிடுகிறோம் என்று சுதாகரிக்க வேண்டும். இது எமது திறமைகள், அறிவு, குடும்பகங்கத்தவர், நண்பர், பொழுதுபோக்கு, புகழ் வரவு, வருமானம் போன்ற பல தரவுகளைச் சார்ந்து அமையலாம். ஆயினும் நமது அடிப்படை மதிப்பீடுகள் இவற்றிற்கு முரணாக இருப்பின் , நாம் எடுத்துக் கொண்ட குறிக்கோளை அடையும் பாதை மிகவும் சிக்கலாகிவிடும்.

இதனால் தான் நாம் நமது  வாழ்க்கைக் குறிக்கோள்களைத் தெரிவு செய்தல் நாம் நினைத்ததை வெற்றிகரமாக  அடைய உதவும். அதே சமயம் மனதிற்குக் கொள்ளாதவற்றை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து விலகி, விரக்திகளைக் குறைத்து மனச்சாந்தியைப் பேணவும் உதவி செய்யும்.

  • யோகி

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad