புல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி
மினசோட்டாவிலுள்ள பி எஸ் கரோகி (PS Karaoke Klub LLC) அமைப்பினர் புல்வாமா தாக்குதலில் பலியான மத்திய சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, கீதா ஆசிரமத்தில் ஃபிப்ரவரி 24ஆம் தேதி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இராணுவத்தினருக்குப் புகழ் சேர்க்கும் பாடல்களைப் பாடி அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட துணை இராணுவத்தினரின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதி ‘இந்தியாஸ் பிரேவ் ஹார்ட்ஸ்’ (India’s Bravehearts) எனும் தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தனிப்பட்ட முறையில் நீங்கள் நன்கொடை அளிக்க நினைத்தால் https://bharatkeveer.gov.in/ எனும் வலைதளத்தில் இதற்கான வசதியுள்ளது.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக!
- ராஜேஷ் கோவிந்தராஜ்
Good coverage your fan from Berlin germany