\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா

மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா ஏப்ரல் 20ஆம் தேதி ஐசன்ஹோவர் சமூகக்கூடத்தில் நடந்தது. மதியம் 2 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா, மாலை ஆறரை மணிவரை நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பங்களிப்புடன் பல்வேறு வகை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. பாடல், நடனம், நாடகம், இசை, பேச்சு என அனைத்துப் பிரிவுகளிலும்  மாணவர்களது திறன் அங்கு வெளிப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்தோரை வரவேற்று பேசிய பள்ளியின் இயக்குனர் திரு. பாலமுருகன் ராமசாமி, பள்ளியின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் குறிப்பிட்டார். பள்ளி மாணவர் குழுவே ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்தும் முன்னுரை அளித்தனர். அரங்கம் நிறையப் பெருமளவில் வந்திருந்த பார்வையாளர்கள், மாணவர்களது நிகழ்ச்சிகளுக்குக் கைதட்டி ஆதரவளித்தனர். பள்ளியின் நிதிநிலை குறித்து பொருளாளர் திரு. நாகப்பன் லட்சுமணன் அவர்களும், தமிழ்ச் சங்கச் செயல்பாடுகள் குறித்து சங்கத் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி அவர்களும் எடுத்துக் கூறினார்கள்.

மினசோட்டாத் தமிழ்ச்சங்கப்பள்ளியின் சார்பில் முன்னதாக இவ்வாண்டு மாநில அளவில் நடைபெற்ற ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, தமிழ்த்தேனீ ஆகிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன. விழாவிற்கு வந்திருந்து நிகழ்ச்சிகளைக் கண்டுக்களித்த டாக்டர் டேஷ் (Dr. Dash) அவர்கள் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். பள்ளி முன்னெடுப்புகள் குறித்தும் வாழ்த்திப் பேசினார்.

விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு இங்கே.

  • சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad