கல்லூரிச் செலவிற்குத் தயாரா?
அமெரிக்காவில் அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரிப்பணம் மூலம் பள்ளிக்கல்வி இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு வரிப்பணத்தில் 8% கல்விக்காகச் செலவிட, மீதி செலவை மாநில அரசின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அதில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. பள்ளிக்கல்வி இலவசமாக அளிக்கப்படும் அமெரிக்காவில் கல்லூரி கல்விக்கான கட்டணம் மிக அதிகம். அதையும் இலவசமாக அளிக்கலாமே என்று கேட்டால், அதற்கேற்ப மக்களால் வரி அதிகமாகக் கட்ட முடியுமா என்று திரும்பக் கேட்க வேண்டி வரும். தவிர, மாணவர் பொறுப்புணர்வு மற்றும் இன்ன பிற காரணங்களைக் காட்டி கல்லூரிக்கான கட்டணத்தைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் வல்லுனர்கள்.
கல்லூரி கட்டணம் என்பது ஊர் ஊருக்கு, கல்லூரி கல்லூரிக்கு, படிப்பிற்கேற்ப மாறுபடுகிறது. அதேப்போல், உள்ளூர்வாசிகளுக்கும் வெளியூர்வாசிகளுக்கும் கட்டணம் மாறுப்படும். உள்ளூர்காரர்களை விட, வெளியூர்காரர்களுக்கு அதிகக் கட்டணம். உதாரணத்திற்கு, யூனிவர்சிட்டி ஆஃப் மினசோட்டாவில் ஒரு வருடத்திற்குச் சுமார் 30 ஆயிரம் டாலர்கள் ...