"என்ன டீச்சர், சாப்பாட்டுப்பைய மறந்துட்டுப் போறீங்க, வேணாமா?" நடத்துனர் பேருந்துக்குள்ளிருந்து நீட்டிய பையை வாங்கிக் கொண்ட தங்கம், அவனுக்கு நன்றி கூறுவது போலத் தலையசைக்க, பேருந்து நெடுஞ்சாலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பஸ் சென்று வளைவில் திரும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த தங்கம், வலது கையில் இருந்த டிஃபன் பாக்ஸ் பையைப் பார்த்துக் கொண்டாள், 'இனி இது தேவையில்லைதான்.. இந்தப் பேருந்துக்கும் எனக்கும் இருந்த தினசரி தொடர்பு கூட இனி இருக்கப் போவதில்லை' மனதுக்குள் ஏதோ பாரமாய் […]