மினுக்க மினசோட்டா மின்னொளி அலங்காரம் (Glow Festival)
மார்கழி மாத மந்த இருட்டைப் போக்கும் முகமாக வந்துள்ளது GLOW Holiday Festival. இது மில்லியன் கணக்கில் மின்னொளி அலங்காரங்களை மினசோட்டா மக்களுக்கு,குதூகலமாகத் தருகிறது. இந்த இருட்டில், ஒளி இன்பத்தை மனதில் தரும் என்பதில் ஐயமே இல்லை. இந்த நிகழ்வு மினசோட்டா fairgrounds இல் இந்த விடுமுறை காலத்தில் நடைபெறுகிறது.
Fair Grounds முகவரி: 1265 Snelling Ave. N., St. Paul, MN 55108
இதன் இன்னொரு நற்செய்தி என்னவென்றால், அதை வாகனத்தில் இருந்தவாறே குடும்பமாக, சுமார் 30 நிமிடங்களில் பார்த்து மகிழலாம்.
இந்தக் கொண்டாட்டம் தொடராக 46 இரவுகள் கொண்டாடப்படும். நவம்பர். 19, 2020 இருந்து சனவரி Jan. 3, 2021 வரைக்கும்.
மேலும், வரும் மக்கள் விரும்பினால் கொண்டாட்ட அலங்காரங்கள் இறுதியில் வாகனத்தில் இருந்தவாறே சிற்றுண்டிகளும் பெற்று, அருந்தி மகிழலாம்.
கடவுச்சீட்டு விபரம்;
ஒரு கடவுச்சீட்டு = ஒரு வாகனம்.
இது வாகன ஓட்டு கேளிக்கை அனுபவம். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும்\, ஒரு முறை ஏறத்தாழ 45 வாகனங்களஅனுமதிக்கப்படும். கடவுச் சீட்டு விலை $46, மற்றும் இதர சிறிய கட்டுமானங்கள் இருக்கலாம். கடவுச் சீட்டுக்கள் நேரடியாக அவ்விடம் பெற்றுக் கொள்ள முடியாது, மின் வலயம் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்விடம் வந்தவுடன் உங்கள் PDFஅல்லது கைத்தொலைபேசி கடவுச்சீட்டு mobile ticket பார்த்து அனுமதிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு GLOW’s event மற்றும் கடவுச்சீட்டு வாங்க glowholiday.com