\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இலங்கையின் பொருளாதாரம் நொடிக்கும் குண்டு

இலங்கை பொருளாதாரம், ஏற்கனவே அவ்விட விலைவாசி உயர்வாலும், வெளிநாட்டு வர்த்தகப் பரிமாற்றங்களுக்கும் பணப் புழக்கம் இல்லாதிருந்த நிலையில் கொரோணாவின் பாதிப்புகளால் மேலும் நொடிக்கும் குண்டாக மாறியுள்ளது.

நாட்டின் மத்திய வங்கி வருமானம் வராதிருப்பினும் 2021 ஆக்டோபர் மாதம் மாத்திரம் $640 மில்லியனுக்கு ஈடான இலங்கை ரூபாய் 130 பில்லியன் ரூபாய்க்கு நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. இது அவர்கள் பொருளாதாரப் பிரச்சனையின் மிகச் சிறிய பகுதி மாத்திரமே. டிசம்பர் 2019 இல் இருந்து ஆகஸ்ட் 2021 வரை, அந்நாட்டு பண அச்சடிப்பு 2.8 ரில்லியன் ரூபாய்கள். இது பொருளாதார ரீதியில் நாட்டின் நிலைமையை எடுத்துப் பார்த்தால் 42% வெறும் பண நோட்டு புழக்க அதிகரிப்பு மட்டுமே. ஆயினும் அதற்குப் பின்னால் உலக நாணயங்களுடன் ஒப்பிடும் போது எந்த வகையான பெறுமதித் தரமும் கிடையாது.

இலங்கையில் கோவிட் காரணமாக தனியார் வர்த்தகங்கள் சம்பளக்குறைவு, சிக்கனப் படுத்தல் போன்றவை மூலம் தம்மைத் தாம் கவனிக்க முனைந்தன. ஆயினும் இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. இந்த அச்சடிக்கப் பட்ட பண நோட்டுக்கள் பெரும்பாலும் 1.2 மில்லியன் அரசாங்க ஊழியர் சம்பளமும், அத்துடன் 1 ரில்லியன் ஓய்வு விதிக்கும் வருடா வருடம் பாவிக்கப்பட்டுள்ளது. மேலும் பண நோட்டு அச்சடிப்பு மூலம் நாட்டு வட்டி வீதங்களையும் மட்டுப் படுத்தலாம் என்று அரசு சிந்தித்தது.

அரச மத்திய வங்கி ஆளுநர் கபரால் இது கொராணாவால் பாதிக்கப்பட் 120 மேற்பட்ட நாடுகள் கடைபிடித்த கொள்கைகளினால் ஏற்பட்ட விடயம் என்று விளக்கம் தருகினும், இலங்கையின் சாதாரண மக்கள் அதித விலைவாசியால் தொடர்ந்து அல்லல் படுவர் என்பதில் கவனம் அதிகம் கொள்ளவில்லை எனலாம். காரணம், இலங்கை, பொருளாதார ரீதியாக கொரோணாவுக்கு முன்பும் பலவீனமாகவே காணப்பட்டது. இன்று இது அடுத்த பலவருடங்களுக்கு விலை வாசி 40% சதவீதம் வரை அதிகரித்து மக்கள் வாழ்வைப் பாதிக்கவும் வாய்ப்பை உண்டாக்கியுள்ளது என்கிறார்கள் பொருளாதார விபரம் தெரிந்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் W.A. விஜயவர்தனா.

இலங்கையில் இறக்குமதிகள் குறைக்கப்பட்டு, தட்டுப்பாடுகள் அதிகரிக்கும் தருணத்தில், ஆக்டோபர் மாதம் சமைக்கும் எரி வாயு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கள் அகற்றியது. இதனால் 12.5 கிலோகிராம் சமையல் எரி வாயு ரூபாய் 1,400 இல் இருந்து ஒருவாரத்திலேயே ரூபாய் 2,675 ஆக அதிகரித்தது. 400 கிராம் பால்மா ரூபாய் 380 இல் இருந்து ரூபாய் 480 ஆக அதிகரித்தது. அதே சமயம் மக்கள் வருமானத்தில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. நாட்டின் அரசாங்க எரிபொருள் தாபனம் எரிபொருள் இறக்குமதி விலையிலும் 5 ரூபாய் அதிகரித்த போதும் 70 பில்லியன் ரூபாய்கள் நட்டம் அடைந்தது.

இந்தப் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்தது 2019ஆம் ஆண்டு புதிதாக ஆட்சிக்கு வந்து சனாதிபதியின் வரி வசூலித்தல் குறைப்பு சிந்தனையும் தேர்தல் சத்தியமளிப்பும் என்று கருதப்படுகிறது. நாட்டின் பொருள் கொள்வனவு வரி 15% இருந்து திடீரென 8% ஆகக்குறைக்கப் பட்டது. மேலும் நாடு முழுதுமான புதிய கட்ட அமைப்பு 2% வரி ஒட்டு மொத்தமாக விலக்கப் பட்டது. இதன் பரிகாரமாக நாட்டின் வருமான வரி வசூலிப்பு 2020இல் 30% குறைந்தது. இத்துடன் 2019 இல் நாட்டின் உற்பத்தி 12.6 % ஆக இருந்து 2020இல் 9.6% சதவீதம் ஆகியது.

இன்று பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள அதிகரிப்புக் கோரிப் போராட, மேலும் மின்சார உற்பத்தித் தொழிற்சகங்கள் நாட்டின் சேவைகள் வெளிநாடுகளுக்கு பணம் இல்லாத போதும் தாரை வார்த்துக் கொடுப்பதாகவும், இலங்கையின் விவசாயிகள் சேதனப் பசளை இல்லாமல் மலையகத்தில் தேயிலை உற்பத்தி 50% குறைவடைய, இதர பகுதிகளில் அரிசி மற்றய உணவுப் பொருட்கள் உற்பத்திக் குறைவுகள் காரணமாக பலத்த ஏதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 1970களில் பாரிய பொருளாதார நிலைமைகளை இலங்கை எதிர் கொண்டிருந்தாலம், 2021 சூழ்நிலை சற்று வேறுபட்டது. இவற்றில் பல அரச ஆளுமைகளின் அவதானக்குறைவுகளாலும், தொடர்ந்து நீண்டகால தீர்வுகளுக்குத் தேவையான உரிய பார்வை செலுத்தாமையும் எனலாம்.

இலங்கையின் நாணய வளர்ச்சி 2020இல் -3.6%, ஆயினும் 2021இல் இது 4.5% அதிகரிக்கும் என்கிறது அரசாங்கம். எனவே ஒட்டு மொத்தமாக இரண்டு வருட நாணய வளர்ச்சி வெறும் 1% சதவீதமாகவே அமையலாம்.  இது ஏழை நாடாகிய இலங்கைக்குப் பாதகமான பாதை மாத்திரமே. 

தமது கொள்கைப் போரில் சீனா வேண்டும் என்று இலங்கை ஆளுமை அரசியல்வாதிகள் கூறினும் நடைமுறையில் நடப்பது வேறாகவே அமையலாம். அதாவது இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியம் சென்று நீண்ட கால கடன் பெறவேண்டி வரலாம். நிதியத்தின் விசேட அகால நிலைமை கோரிக்கை மூலம் இலங்கை அமெரிக்கச் செலவாணி $2.8 பில்லியன் பெற்று அடுத்த 4.5 முதல் 10 வருடங்கள் வரை 3.5% வட்டியுடன் வாழலாம். இது அன்றாட மக்கள் வாழ்வுக்குச் சற்று இளைப்பாறுதலைத் தரலாம். ஆயினும் இவையாவும் இலங்கை ஆளுமையின் கையிலேதான் உள்ளது.

  • அயல்வேலிக் குருவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad