\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கோடைக்கால காய்கறி விருந்து

santhai_520x308கோடைக்காலத்தில் உழவர் சந்தைகள் மினியாப்பொலிஸ்-செயிண்ட் பால் மாநகரங்களிலும் பல்வேறு சுற்றுப்புற நகரங்களிலும் நடைபெற்று வருகின்றன.

கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் புதிதாய் மலர்ந்த பூக்கள், புதிய காய்கறிகள், பழங்கள், துளிர் கீரைவகைகள், விதவிதமான கிழங்குங்கள், பூசனிகள் , பால், வெண்ணெய், முட்டை, தேன் போன்றவை இந்த சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

விவசாயிகள் தங்கள் தோட்டத்திலிருந்து நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால் காய்கறிகளிலும் மற்றைய பொருட்களிலும் இரசாயனக் கலவை பூசப்படுவதில்லை. பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்களை நீண்ட நாள் பாதுகாக்க இரசாயனப் பூச்சுகள் தடவப்படுகின்றன. உழவர் சந்தையில் இவை தவிர்க்கப்படுவதால் பொருட்கள் ஆரோக்கியம் நிறைந்ததாக காணப்படுகின்றன. நேரடி விற்பனையால் விலையும் குறைவு. எல்லாவற்றுக்கும் மேலாக அங்காடிகளில் கிடைக்காத சில அறிய வகை காய்கறிகளும் இங்கு கிடைக்கும். எடுத்துக் காட்டாக வெந்தயக் கீரை, பருப்புக் கீரை, ஆசிய வகை கத்தரி, வெண்டை, பாகற்காய் போன்றவை பொதுவாக அமெரிக்க கடைகளில் கிடைப்பதில்லை. இந்த சந்தைகளில் அவைகளை நிரம்ப காண முடியும்.

இதன் காரணமாகவே வார இறுதி நாட்களில் இங்கு கூட்டம் நிரம்பி வழியும்.

வெட்ட வெளியில், மக்கள் கூட்டம் கூட்டமாக பைகளை சுமந்துக் கொண்டு கடை கடையாக பார்த்து வாங்குவதும், அங்கு விற்கப்படும் சோளக் கதிர் இன்னபிற உணவுப் பொருட்களின் மணமும் நம்மில் சிறு பிராயத்து நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும்.

இதோ சில இடங்களில் நடைபெறும் உழவர் சந்தை விபரங்கள்.

நகரம் நாள் நேரம் இடம்
Bloomington சனி காலை 8-1 Bloomington Civic Plaza
Burnsville வியாழன் மாலை 12-5 Mary, Mother of the Church
Chanhassen சனி காலை 9-1 City Center Park
Eagan புதன் மாலை 4-8 Eagan Festival Grounds
Edina வியாழன் மாலை 3-7 Centennial Lakes Park
Excelsior வியாழன் மாலை 2-6 Mount Calvary Lutheran Church
Hopkins சனி காலை 7:30-12 Downtown Park
InverGrove Heights வியாழன் மாலை 3-6:30 Veteran’s Memorial Community Center
Lakeville புதன் மாலை 12-6 Holyoke and 210the Street
Maple Grove வியாழன் மாலை 3-7 Maple Grove Community Center
Minneapolis வாரம் தோறும் காலை 6-1 Minneapolis Farmer’s Market
Minneapolis சனி காலை 8-1 Mill City Farmer’s Market
Minneapolis வியாழன் காலை 6-6 Nicollet Mall
Mound சனி காலை 8-12 Mound Transit Center
Richfield சனி காலை 7-12 Veteran’s Memorial Park
Rosemount செவ்வாய் மாலை 2-6 13885 South Roberts Trail
Shoreview செவ்வாய் மாலை 3-7 Shoreview Community Center
Stillwater சனி காலை 7:30-12 3rd and Pine Riverview Lot
St. Louis Park புதன் காலை 11-1 The Shops at West End
St. Paul செவ்வாய்,வியாழன் காலை 10-1:30 7th Place Mall
St. Paul சனி காலை 6-1 Downtown Farmer’s Market
St. Paul வெள்ளி மாலை 1:15-5 St. Thomas Moore Church
White Bear Lake வெள்ளி காலை 8-12 Downtown White Bear
Woodbury ஞாயிறு காலை 8-1 Central Parl/YMCA

இதோ படமாக உழவர் சந்தை விபரங்கள்.

santhai_2_920x713

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad