இலகுவான ஆப்பிள் பை (Apple Pie)
இந்த எளிதான ஆப்பிள் பை விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழக தோழியின் தாய் அளித்த சமையற்குறிப்பு. ஆப்பிள் அறுவடை ஆரம்பிக்கும் செப்டெம்பர் மாதத்தில், இந்த இலகு முறை ஆப்பிள் பையை செய்ய விரும்புவதுண்டு. நான் பெரும்பாலும் நறுமணத்திற்கு ஜாதிக்காய் (nutmeg) சிறிதளவு சேர்க்கிறேன்; நீங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையானவை
- 9 அங்குல இரட்டை மேலோடு ஆப்பிள் பைக்கு, 1 தொகுப்பு (14.1 அவுன்ஸ்) பேஸ்ட்ரி தேவை.
உள்ளூர் மளிகைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
- 3/4 கோப்பை சீனி, அல்லது சுவைக்கு மேலாகத் தூவிக் கொள்ளலாம்
- 1 தேக்கரண்டி குற்றி எடுத்துக் கொண்ட கறுவாப் பட்டை
- 6 கோப்பை மெல்லிய துண்டுகளாக அரிந்து எடுக்கப்பட்ட ஆப்பிள்கள்
- 1 தேக்கரண்டி வெண்ணெய் butter
செய்யும் முறை
அகலடுப்பை முன்கூட்டியே 450 F (230 C)க்கு சூடாக்கவும். ஒரு பேஸ்ட்ரி மேலோடு (ஒரு 9 அங்குல பை டிஷ்) எடுத்துக்கொண்டு இரண்டாவது பாகத்தை தனியாக ஒதுக்கி வையுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 3/4 கப் சீனி மற்றும் தூளாக்கிய கறுவாப் பட்டை ஆகியவற்றை கலந்துகொள்ளவும். ஆப்பிள்கள் சற்று புளிப்பாக இருந்தால் அதிகச் சர்க்கரை சேர்க்கவும். தயாரிக்கப்பட்ட பை டிஷ்ஷில் ஆப்பிள் துண்டுகள், கறுவாப் பட்டை தூள்-சீனி கலவை என தனித்தனி அடுக்குகளாக நிரப்பிக் கொள்ளவும். மேல் பரப்பு சிறிய துண்டுகள் மேல் வெண்ணெய் தடவி எடுக்கவும். அதன் பிறகு மேல் புறத்தை (top crust) தனியாக எடுத்து வைத்த பேஸ்ட்ரி கொண்டு மூடவும். ஓரங்களை இடைவெளியில்லாமல் அழகாக மடக்கி ஒட்டிக்கொள்ளவும்.
நிரப்பப்பட்ட பையை அகல் அடுப்பில் வைத்து, 10 நிமிடங்களுக்குப் பின் வெப்பத்தை 350 F (175 C) ஆகக் குறைத்து வைக்கவும். தங்க பழுப்பு நிறம் வரும் வரையில் (சுமார் 30 முதல் 35 நிமிடங்கள் வரை) தொடர்ந்தால் சுவையான ஆப்பிள் பை தயாராகிவிடும்.
இந்த ஆப்பிள் பையை, சூடாக அல்லது குளிர்ச்சியாக, ஐஸ்கிரீம், காப்பி, தேநீருடன் சேர்த்து பரிமாறியோ அல்லது தனியாகவோ சுவைக்கலாம்.
– யோகி