சமையல் : பிஸிபேளேபாத்
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – ½ கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பீன்ஸ் – 10
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 1
முருங்கைக்காய் – சிறிதளவு
புளி – சிறிய எலுமிச்சை அளவு (கரைத்து கொள்ளவும்)
மிளகாய்த் தூள் – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – சிறிதளவு
மசாலா அறைப்பதற்காகத் தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்
தனியா – 2 ஸ்பூன்
மிளகு -1/2 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -8 (௮) 10
பட்டை – 2 சிறிய துண்டு
கிராம்பு – 2
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் -1/4 கப்
தாளிக்கத் தேவையான பொருட்கள்:
எண்ணை – தேவையான அளவு
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்
கரிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 2 ஸ்பூன்
கொத்துமல்லி இலை சிறிதளவு
செய்முறை:
- அரிசி மற்றும் துவரம் பருப்பை தனித் தனியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
- மசாலா அறைக்கத் தேவையான பொருட்களை வாணலியில் பொன்னிரமாக வறுத்து தேங்காய்த் துறுவலுடன் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதந்கிய உடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- பின் அதனுடன் கரைத்த புளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
- காய்கறிகளுடன் அரைத்த மசாலா மற்றும் பருப்பைச் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். தேவைப்பட்டால் மிளகாய்த் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
- அதனுடன் வேகவைத்துள்ள அரிசியுடன் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு மசியக் கிளறி, கொத்துமல்லி இலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
சுவையான பிஸிபேளேபாத் தயார்!!!
– சங்கீதா
Thanks for your பிஸிபேளேபாத் samayal kurippu