IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022
வட அமெரிக்காவில் உள்ள மின்சோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் மற்றும் உள்ளூரில் உள்ள அமைந்துள்ள மற்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதியை அகிம்சை வாரத்தின் கடைசி நாளாகக் கொண்டாடியது. இந்த விழா மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள செயின்ட் பால் நகரில் அமைந்துள்ள மினசோட்டா வரலாற்று மையத்தில் (Minnesota History Center) நடைபெற்றது. அக்டோபர் இரண்டாம் தேதி என்றால் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தி அவர்களது பிறந்த நாள். காந்திஜி என்ற பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருவது அவர் நடத்திய அறப்போராட்டம்.
இன்றைய காலகட்டத்தில் நாடுகளுக்கிடையேயான போர்களும் உள்நாட்டுப் போர்களும் அதிகரித்து வருகின்றன. அதன் தீமைகளை உணர்த்தும் வகையில் அக்டோபர் இரண்டாம் தேதி ஒட்டிய வாரத்தை அகிம்சை வாரமாக இத்தொண்டு நிறுவனங்கள், பல ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் சிறப்பு பேச்சாளர்களாக வில் வாலஸ் (Will Wallace), அன்னா சரோஸ் (Anna Zaros), பிரட் பூக்கநேர் (Brett Buckner) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இவர்கள் மூவரும் பல தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ‘காந்திஜி விருது’ (Gandhi Award) இந்த முறை மூவருக்கு வழங்கப்பட்டன. மெல் டங்கன் (Mel Duncan), ஃபாதர் ஹாரி பரி (Harry Bury), ஷீலா லேம்ப் (Sheila Lamb) ஆகியோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
இந்த விழாவை ஒட்டி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த இந்த விழாவில் சிறப்பு அம்சமாக கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உள்ளூரில் அமைந்துள்ள பரதநாட்டிய குழுவினர் (Nritya Kalakshetra Academy of Performing Arts Minnesota) அற்புதமான நடனங்களுடன் விழாவை சிறப்பித்தனர். இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொண்டு நிறுவன அமைப்பினர் பலரும் கலந்துகொண்டு இந்த விழாவைச் சிறப்பித்தனர்.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக!
- ராஜேஷ் கோவிந்தராஜன்.
Tags: IAM, Non-violence, Nritya Kalakshetra, வன்முறை