பிங்க் கார்பா (Pink Garba)- மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஐக்கிய அமெரிக்காவின், மினசோட்டா மாநிலத்திலுள்ள மினசோட்டா இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (IAM) அமைப்பின் மூலம் ‘பிங்க் கார்பா – மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு’ நிகழ்ச்சி, கடந்த மாதம் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது.
மக்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது தொடர்பான மருத்துவம் குறித்த தெளிவான தகவலை கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய மற்றும் அமெரிக்க உணவின் விருந்தோம்பலுடன் தொடங்கிய விழாவில், பின்னர் புற்று நோயின் வல்லுனர்கள், மருத்துவர்கள், தன்னார்வத் தொண்டாளர்கள் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு முழுவதும் குணமானவர்கள் என எட்டு பேர் கொண்ட குழு இதனைப் பற்றி விவாதித்தார்கள். எவ்வாறு புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்று போன்ற விளக்க உரையும் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு வந்திருந்த அனைவரும் பிங்க் (Pink Color) வண்ண உடை அணிந்து வந்திருந்தது புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வின் குறியீடாக அமைந்திருந்தது. வந்திருந்த அனைவரையும் IAM சார்பில் வரவேற்று நிர்வாகிகள் பேசினார்கள். தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியுடன் விழா இனிதே முடிந்தது.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக!!!