மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022
மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை அவர்கள் அமைப்பின் சார்பில் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் இதே போல் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று மினசோட்டாவில் அமைந்துள்ள ஹாப்கின்ஸ் சமுதாயக் கூடத்தில் (Hopkins Community Center) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்
சிறப்பு விருந்தினராக ஜேம்ஸ் சீட்டேத் (James Chitteth) (Pastor St. Bonaventure, Bloomington MN), ஆப்ரஹாம் கோச்சுபுறக்கல் (Abraham Kochupurakkal) (Pastor of Ascension and St. Bernard Parishes, Bloomington, MN), பிஜு பட்டசிசேரில் (Biju Pattasseril) (Pastor, St. Boniface Catholic church, Minneapolis), Dr.ப்ருஸ் கோரி (Dr. Bruce Corrie) (Professor of Economics, Concordia University) ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் சங்க குழுக்களில் உள்ளவர்களும், உறுப்பினர்களும் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில் பின்பு அனைத்து விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் மாலை நேர சிற்றுண்டி வழங்கப்பட்டு, விழா இனிதாக முடிவு பெற்றது.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில, இதோ உங்களுக்காக !!
- ராஜேஷ் கோவிந்தராஜன்.