IAMன் 50 ஆவது ஆண்டு விழா
இந்த வருடம் IAMஇன் 50 ஆவது வருடம் ஆரம்பிக்கின்றது இதை முன்னிட்டு IAM 50வது ஆண்டு விழாவும் Connect India என்ற விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இந்த விழா சென்ற மாதம் 15 ஆம் தேதி ப்ளூமிங்டன் உள்ள “டபுள் ட்ரீ” என்ற தங்கும் விடுதியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நோக்கமாக 50வது ஆண்டின் IAM எவ்வாறு வளர்ந்தது என்னென்ன சாதனைகள் செய்தது என்ற முக்கிய குறிக்கோளாக இந்த விழாவைச் ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்றைய தினம் 5:30 அளவில் அனைவரையும் வரவேற்று ஐந்து முப்பது மணி அளவில் நட்சத்திர வரவேற்புரை அறை திறக்கப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. வந்திருந்த அனைவரும் வரவேற்பறையில் புகைப்படம் எடுப்பதற்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டு வந்திருந்த அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். IAM சார்பில் அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு என்று உரிய இடத்தில் அமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு பல்வேறு தொண்டு நிறுவனத்திலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பின்பு விழா நடைபெற்ற இடத்தில் அனைவரும் அமர்ந்த பிறகு IAMன் தலைவர் (President) தனிவி பிரிஃஜ் (Tanwi Prigge) அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். இந்த விழாவில் நிகழ்ச்சி நடத்த IAMஇன் சார்பில் பயிற்சி எடுத்துக் கொள்ளும் இரு நபர்கள் இந்த விழாவை ஜாஸ் ப்ரேக்ஹ் (Jash Parekh) and ஐசானி கோஸ்வாமி (Aishani Goswami) தொகுத்து வழங்கினார்கள்.
இந்த விழாவில் இரு நபர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன, சுரேஷ் கிருஷ்ணாவிற்கு (Suresh Krishna) சிறந்த தொழில் நடத்துபவருக்காகவும், சுஜாதா தட்டாவிற்கு (Sujata Dutta) சிறப்பாக மருத்துவ சேவை புரிந்ததற்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.. வாழ்வின் சாதனையாளர் விருது சிறந்த புத்தகம் மற்றும் சமையல் கலைஞருக்கு மறைந்த ராகவன் ஐயருக்கு (Raghavan Iyer) வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பழைய தலைவர் சூயஸ் ஜெயின் (Suyash Jain) அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் டாக்டர் டேஷ் (Dr.S.K.Dash) அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல் ‘இந்தியா பெஸ்ட் 2022’ (India Fest 2022) என்ற விழாவில் சிறப்பாக செயல்பட்ட 3 தொண்டு அமைப்புகளுக்கு சிறந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த சேவை நிலையம் அமைத்ததற்காக பெங்காலி அசோசியேஷன் ஆப் மினசோட்டா (Bengali Association of Minnesota) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, சிறந்த அணிவகுப்பு அமைப்பாக ஒடியா சொசைட்டி ஆப் மினசோட்டா (Odiya Society of Minnesota) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, சிறந்த காட்சி அமைந்த நிறுவனம் மினசோட்டா மலையாளி சங்கத்திற்கு (Minnesota Malayalee Association) வழங்கப்பட்டது.
சிறந்த பேச்சாளர்களாக நிர்வாக சகித் (Nirav Sheth) மற்றும் டாக்டர் அமித் படை (Dr. Amit Patel) சிறப்பு உரை வழங்கி இந்த விழாவை சிறப்பித்தனர்.
இந்திய விழா என்றாலே உணவும் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் எந்த ஒரு விழாவும் நடப்பதில்லை. விழாவில் பஞ்சாபி மக்களுடைய பஞ்சாபி நடனமும் மற்றும் ஒடிசா நகரத்து நடனமும் ஆடப்பட்டது. பின்பு பின்பு பேஷன் ஷோ மூலம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அனைவரையும் சிறப்பித்தனர்.
இந்த 50ஆம் ஆண்டு விழாவில் IAMன் பல தலைவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற தலைவர் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். IAMன் பயிற்சி மாணவர்கள் (Intern) மற்றும் IAMன் நிறுவனத்தில் உள்ளவர்களும் சேர்ந்து இந்த விழாவை மிகவும் சிறப்பாக செய்து முடித்தனர்.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் சில உங்களுக்காக!