ஒரு மாவட்டம், பல குரல்கள்
ரோஸ்மவுண்ட், ஆப்பிள் வேலி, ஈகன் ஆகிய நகரங்களில் இருக்கும் பள்ளிகளை உள்ளடக்கிய கல்வி மாவட்டமானது, ISD 196. இந்தக் கல்வி மாவட்டம் சார்பில், இங்குள்ள பள்ளிகளில் சமீபத்தில் ‘ஒரு மாவட்டம், பல குரல்கள்’ (One District, Many Voices) என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள். மே மாதம் 5 ஆம் தேதியன்று இந்த நிகழ்ச்சி, ஆப்பிள் வேலி உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்பகுதியில் உள்ள பல்வேறு சமூகத்தினரின் இசை, நடனங்கள், பாடல்கள் கொண்ட கலை படைப்புகள், மேடையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் அரங்கேற்றப்பட்டன.
கூடவே, பல்வேறு சமூகத்தினரின் மரபு சார்ந்த கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. வந்திருந்தவர்களுக்கு இந்திய, மெக்சிகன் மற்றும் எத்தியோப்பிய நாடுகளின் உணவு வகைகள் வழங்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் வாழும் பலதரப்பட்ட மக்களின் கலாசார அம்சங்களை ஓரிடத்தில் காணும் வாய்ப்பு இங்குக் கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்குக் காணலாம்.
- சரவணகுமரன் –