உணவூட்டிகள் (Feeders)
உங்கள் தேன்குருவி உணவூட்டிகளை வெளிக் கொண்டு வரச் சிறந்த நேரம் இலைதுளிர்க் காலமாகும். இலைதுளிர் காலத்தில் புலம் பெயரும்போது தேன்குருவிகளுக்குச் சிறிய ஆற்றல் ஊக்கத்தை அளிப்பது ஆர்வலராகிய எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தென்கிழக்கில் தேன்குருவிகள்:
வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் ஒரே ஒரு வகை தேன்குருவி உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். செம்மாணிக்க-தொண்டை தேன்குருவி – மற்றவை சில சமயங்களில் இலையுதிர் காலத்தில் இப்பகுதி வழியாக இடம் பெயர்கின்றன.
ஃபிப்ரவரி மாதத்தின் கடைசிப் பாதியில் செம்மாணிக்க-தொண்டைகள் கண்டத்தின் வளைகுடாக் கடற்கரையில் மீண்டும் வரத் தொடங்குகின்றன. ஆனால் ஆரம்ப காலத்தில் புலம் பெயர்ந்தவை தெற்கு லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் ஃபுளோரிடாவில் கடற்கரையோரத்தில் தங்கியிருக்கின்றன. அவை பெரும்பாலான இடம் பெயர்வுகள் மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் நிகழ்கின்றன. அவை வடக்கு நோக்கி மேலும் மினசோட்டா மற்றும் அமெரிக்க கனடா உள்நாட்டிற்குச் செல்லும்.
நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, தேன்குருவி உணவூட்டிகளை ஃபிப்ரவரி பிற்பகுதியில் வைக்கலாம். இவ்வருடம் ஏப்ரல் மாதம் மினசோட்டாவில் நீங்கள் ஆரம்பிக்கலாம்.
ஆனால் பெரும்பாலான தென்கிழக்குப் பகுதிகளுக்கு, மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கம் வரை காத்திருப்பது பரவாயில்லை.
தேன்குருவி உணவூட்டிகளை எப்போது வைக்க வேண்டும்:
பறவைகள் வருவதற்கு முன் உங்கள் தீவனத்தை வெளியே வைத்தால், முதல் பறவைகளைச் சந்திக்க முடியும்.
அவை வந்தவுடன் உடனடியாக சிறிது உணவைப் பெறுவது அவைகளுக்கு உதவியாக இருக்கிறது. அவை வெகுதூரம் கோஸ்ட்டாரிகா போன்ற இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து வருவதனால் நாம் இடும் உணவு ஆற்றலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. இது வெற்றிகரமாக இனப்பெருக்க காலத்திற்கான பாதையில் செல்லவும் அவைகளுக்கு உதவும்.
அதே வேளையில், தேன்குருவி பறவைகள் உங்கள் தீவனங்களைச் சார்ந்திருப்பதைப் பற்றி வலியுறுத்தவோ கவலைப்படவோ வேண்டாம்.
மற்ற ஊட்டச்சத்தை இயற்கையான பூக்கள் போன்றவற்றிலிருந்து அவை பெற்றுக் கொள்வது சிறந்தது. தமது புரதத்தை பூச்சிகளிலிருந்தும் பெறுகின்றன. அவை பல்வேறு மூலங்களிலிருந்து கண்டுபிடித்து சாப்பிடும். பூக்களுக்குள் காணப்படும் பல சிறிய பூச்சிகளை அவை உண்கின்றன, எனவே சில சமயங்களில் அவை பூக்களிலிருந்து தேன் அருந்தாமல், பூவில் இருக்கும் சிறிய வண்டுகளையும் மற்ற பூச்சிகளையும் சாப்பிடக்கூடும்.
உங்கள் தேன்குருவி உணவூட்டகளை தொங்கவிடத் தயாரா? உங்கள் முற்றம் தேன்குருவிப் புகலிடமாக இருப்பதை உறுதிசெய்ய வல்லுநர்களின் முக்கிய குறிப்புகள் இங்கே உள்ளன.
ஊட்டி கைவேலைத் திட்டம்:
உணவூட்டிகளைப் புதர்கள் மற்றும் பிற பூர்வீகப் பூக்கள் உள்ள பகுதிகள் உள்ள முற்றத்தில் அல்லது தோட்டத்தில் தொங்கவிடுவது நலம். அது பறவைகளுக்கு உட்காரவும் ஓய்வெடுக்கவும் இடமளித்து, பாதுகாப்பையும் வழங்குகின்றது. இயற்கை உணவுகளின் மாற்று மூலத்தை பூக்கள் வழங்க முடியும்.
பறவைகளை ஈர்ப்பதில் உணவூட்டி வைக்கப்படும் இடம் ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும், ஜன்னல்களுக்கு அருகாமியில் வைப்பதைத் தவிர்ப்பது முக்கியம்.
ஆக்கிரமிப்பு அல்லது ஆதிக்கம் செலுத்தும் தேன்குருவிகள் தேவையில்லாமல் மற்றயவைகளை பயமுறுத்தாத வகையில் அவைகளுக்கான இடைவெளி இருக்க வேண்டும். தரையில் இருந்து நான்குஅல்லது ஐந்து அடி உயரத்தில் தொங்கவிடவும்.
மற்ற தீவனங்களை விட தேன்குருவி உணவூட்டகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுது முக்கியம். குறிப்பாக வெப்பமான காலநிலையில், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
ஊட்டிகளில் வைக்கப்படும் தேனின் பராமரிப்பு:
கொடிய பூஞ்சை நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க, சில நாட்களுக்கு ஒருமுறை தேனை மாற்றுவது முக்கியம். தென்கிழக்கில், நமது வசந்த காலமும் கோடைக் காலமும் மிகவும் வெப்பமாக இருப்பதனால், அந்த நேரத்தில் தேனை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். எவ்வளவு நேரம் இருந்தாலும், தேன் கெடத் துவங்கியிருந்தால், உடனடியாக ஊட்டியைச் சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
தேன்குருவி பறவைகள் சிவப்பு நிறத்தால் ஈர்க்கப்படுகின்றன என்று கார்னெல் பல்கலைக்கழகத்தின் பறவையியல் ஆய்வகம்கூறுகிறது. இவை பறவைகளின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சிவப்புச் சாயத்தை உள்ளடக்கிய அல்லது செயற்கை நிறத்தில் உள்ள தேன் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பூர்வீகப் பூக்கும் தாவரங்கள் தேன்குருவிகளுக்குத் தேன் சிறந்த ஆதாரம். தேன்குருவிப் பறவைகளை ஈர்க்கும் மற்றும் தங்கள் பகுதியில் வெற்றிகரமாக வளரும் பூர்வீகத் தாவரங்களைக் கண்டறிய ஆர்வலர்கள் தாவரங்களுக்கான பறவைகள் தரவுத்தளத்தைப் பயன்படுத்தலாம்.
“கிழக்குக் கடற்கரையின் பெரும்பகுதியில் வளரும் தாவரங்களில் ஒன்று பூர்வீக பவள ஹனிசக்கிள் . இந்த ஆலை செழிப்பாகவும்,எல்லாப் பருவத்திலும் பூக்கும். தெற்கில், சில இடங்களில் ஆண்டு முழுவதும் இருக்கலாம். தேன்குருவிகள் சிறிய கொசுக்கள் மற்றும் சிலந்திகளையும் உண்கின்றன, எனவே, பூச்சிகளின் வாழ்க்கையை ஆதரிக்கும் பூர்வீகத் தாவரங்களை வளர்ப்பதன் மூலம், தேன்குருவிகளின் அனைத்து உணவுத் தேவைகளுக்கும் ஆதரவாக இருக்க இயலும்.
பூந்தோட்ட நீர் விசிறியை (yard Mister):
பறவைக் குளியலில் ஒரு மிஸ்டரைச் சேர்ப்பதைக் கவனியுங்கள், மேலும் பல இனங்கள் அதை அனுபவிக்க வாய்ப்புள்ளது. கோடை மாதங்களில் ஹம்மிங் பறவைகள் குடிப்பதற்கும், பறக்க, மற்றும் குளிப்பதற்கும் மிஸ்டர்கள் பயன்படும்.
தேன் தயாரிப்பு:
தேவையற்ற சிவப்பு சாயம் இல்லாமல் தேனை வீட்டிலேயே தயாரிப்பது எளிதானது. விகிதாச்சாரத்தில் 1/4 கப் சர்க்கரை 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்தால், தேன் தயார்.
தேன்குருவி உணவூட்டிகளில் உள்ள தேன் சிவப்பு நிறமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், பெரும்பாலான உணவூட்டிகளில் சிவப்புச் செயற்கைப் பூ அல்லது அதைப் போன்ற ஏதாவது இருப்பது பறவைகள் உணவைத் தேடுவதற்கான இடம் என்பதைக் குறிப்பிடுகிறது. உங்கள் ஊட்டிக்கு நிறைய தேன்குருவிகள் வந்தால், அவை அனைத்திற்கும் உணவு கொடுக்க நிறையத் தேன் தேவைப்படலாம், பறவைகளின் எண்ணிக்கை குறைவாக மட்டுமே இருந்தால், அதற்கேற்ப தேன் அளவைச் சரி செய்து கொள்ளலாம்.
– யோகி