\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவித்துளிகள் சில…

Filed in இலக்கியம், கவிதை by on October 6, 2013 0 Comments

poem_droplets_520x767அமாவாசை

சிதறிய நட்சத்திரங்களுக்குள்

செத்துக் கிடக்கிறது ஒரு நிலா.

 

கையடக்கத் தொலைபேசி

சட்டைப் பையில் பதுங்கியிருந்து

பணம் பறிக்கும் இரகசியக் கொள்ளைக்காரன்…

 

இன்றைய ஈழம்

நாளை என் வீட்டில் திருடர்கள் வரலாம்…

என் வீட்டுத் தெருவில் காவலர்கள் போகிறார்கள்…

 

புல்லாங்குழல்

காற்று நுழைந்து சில்மிசம் செய்யும் வரை

ஊமையாகத்தானே கிடந்தது புல்லாங்குழல்…

 

தும்மல்

கண் மூடித் தியானிக்க

கடவுள் தந்த கணநேர வரம்.

 

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad