\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வலி சுமந்த பயணம்

Filed in இலக்கியம், கவிதை by on October 6, 2013 0 Comments

valimai_sumantha_payanam_1_300x225விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி

உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது…

ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து

உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…

                                                                                            (விழியிரண்டும்……)

 

சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை

வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்…

முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப்

பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்…

                                                                                               (விழியிரண்டும்……)

 

பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே

ஏதிலியாய்ப்  பாவியராய் பயணிக்கும் நேரமிது…

வேறுதுணை யாருமின்றி வேறுவழி ஏதுமின்றி

மிச்சசொச்ச உசிரை நாங்கள் தக்க வைக்கும் பயணமிது…

                                                                                            (விழியிரண்டும்……)

 

பச்சை இளங்குருத்தை பாசமுள்ள கண்மணியை

வேள்வியில் பறிகொடுத்து போகின்ற பயணமிது…

கண்கள் சிந்தும் பூக்கள் தூவி… வலிகள் சுமந்து புது வழிகள் தேடி

வாய்கள் மூடி மௌனியாகி வாழ்தல் வேண்டி

கால்கள் போகும் பாதை நோக்கி நாங்கள் போகும் பயணமிது

                                                                                           (விழியிரண்டும்……)

 

 

– தியா –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad