\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உலகச் செம்மொழி – அத்தியாயம் 7

Chemmozhi_2_620x472அத்தியாயம் 6 செல்ல இங்கே சொடுக்கவும்

உலகின் மிகப்பழமையான நாகரிகங்களான சிந்துச் சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், சீன நாகரிகம் மற்றும் மாயன் நாகரிகங்களில் தமிழ் மற்றும் தமிழரின் தொடர்புகளை உறுதிப்படுத்தப் பல சான்றுகள் உள்ளன. உலகில் ஒவ்வொரு நாளும் சூரியன் முதலில் உதிக்கும் ஜப்பான் நாட்டின் மொழியான யப்பான் மொழி முதல் ஒவ்வொரு நாளும் சூரியன் கடைசியாக மறையும் அமெரிக்க சுமோன் தீவின் ஆதி மொழியான சுமோன் மொழி வரை, கிட்டத்தட்ட எல்லா  பிரதேசங்களிலுமுள்ள மொழிகளுக்கும் தமிழ் தன் செழுமையான சொற்களை வாரி வழங்கியுள்ளது. இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்பது என் கருத்து.

  1. முழுகிய குமரிக் கண்டத்திலிருந்து தப்பிய தமிழர்கள் குடியேறிய இடங்களின் தட்ப வெப்ப சூழலினால் தமிழ் மொழி திரிந்து புது மொழி போலத் தோன்றியிருக்கலாம்.
  2. குமரிக்கண்டத்திலிருந்து ஆழிப்பேரலைக்கு தப்பியவர்களினால் குடியேற்றமடைந்த நாடுகளில் இருந்த மொழிகளுடன் தமிழ் கலந்திருக்கலாம்
  3. உலகம் முழுதும் வணிகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழ் வணிகர்கள் மற்றும் கடலோடிகள் வாயிலாகவும் தமிழ் மற்றைய மொழிகளில் கலந்திருக்கலாம்.

ஜப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . இரண்டு மொழிகளும் 90% முதல் 95% சதவீதம் ஒரே மாதிரி இலக்கணக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.

சுசுமு ஓனோ என்ற ஜப்பானிய அறிஞர் தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை உலகறியச்செய்தவர். ஜப்பானிய மொழியின் தோற்றம் என்னும் நூலை இவர் இயற்றியுள்ளார். அதில் தமிழ் மொழி ஜப்பானிய மொழியின் மூல மொழியாக இருக்கலாம் என்ற  கருத்தைச் சொல்லியுள்ளார்.

இதுவரை சுமார் நானூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் ஜப்பானிய மொழியில் ஒலியிலும் பொருளிலும் ஒத்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சில

அண்ணா-அண்யா

தந்தை-தன்ட

நம்பு- நமு

யாறு- யற

நீங்கு-நிகு

உறங்கு-உரகு

கறங்கு-கரகு

அகல்-அகரு

அணை-அண

கல்-கர

ஜப்பானிய தமிழ் மொழியாய்வில் சுசுமு ஓனோவுடன் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பொற்கோ, இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு மற்றும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு இணைந்துப் பணியாற்றியுள்ளனர். மொழி மட்டுமின்றி ஜப்பானியர்களின் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள் நம்மை ஒத்தே உள்ளதென களப்பணி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்த இதழில் நாம கொரிய மொழிக்கான தொடர்பு பற்றி ஆராயலாம்.

-சத்யா-

குறிப்பு நூல்கள்

https://arutkural.tripod.com/tolcampus/jap-tamil.htm

https://www.nilapennukku.com/2012/09/relationbetweentamilandjapanese.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad