\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காதலும் காமமும்

Filed in இலக்கியம், கவிதை by on December 5, 2013 0 Comments

kadhal_kamam_620x620

காதல்

கட்டிய சேலை சற்றே விலகினால்

காதில் சொல்லித் திருத்தச் செய்யும்!

காமம்

கண்ணில் கண்ட பெண்களை எல்லாம்

காந்தர்வமாய் துகில் உரிந்து மெல்லும்!

 

காதல்

கன்னி அவளின் தொப்புள் குழியை

கருவறைச் சேயின் உணவாய்ப் பார்க்கும்

காமம்

கண்ட அந்த கன்னி வளைவில்

கருத்தாய்ப் பம்பரம் கணக்காய்ச் சுற்றும்

காதல்

கன்னி அவளின் களையான முன்னழகை

கடும்பசிப் பிள்ளை புசிப்பதாய்ப் பார்க்கும்

காமம்

கருத்தாய்க் குழந்தைக்குப் பாலூட்டும் பொழுதும்

களங்க மனத்துடன் கொச்சையாய் நோக்கும்

காதல்

கன்னி அவளின் பின்புற அழகை

கண்ணால் கண்டு நளினமாய் ரசிக்கும்

காமம்

கன்னி அவளின் பின்னே சென்று

கரைந்து அழைத்தால் கவிழ்வாளென முயலும்

காதல்

கன்னி அவளின் களைமுகம் கண்டு

கனிவாய் வளர்த்த அன்னையாய்த் துதிக்கும்

காமம்

கன்னி அவளின் அதரம் குவிந்து

கட்டுடல் சுவைப்பதாய்க் கற்பனை செய்யும்

காதல்

கன்னி அவளின் உடல்நலம் கருதி

கணக்காய் உடற்பயிற்சி கற்பித்து மகிழும்

காமம்

கன்னி அவளின் கட்டழகு கருதி

கணக்காய் உணவுக் குறைப்புச் செய்யும்

காதல்

கன்னி அவளின் நித்தியத் தேவை

கடமையாய் அறிந்து களிப்புடன் கொடுக்கும்

காமம்

கன்னி அவளின் நித்திய நிலவரம்

கரவினில் அறிந்து கதவுபின் திட்டமிடும்

காதல்

கன்னி அவளின் மாத விடாயில்

கலந்து உதவி களைப்பழிக்கச் செய்யும்

காமம்

கன்னி அவளின் அந்த மூன்றுநாள்

கலந்திட இயலா கவலையில் புலம்பும்

காதல்

கன்னி உடன்கூடி கடவுள் கண்டிட

கருத்தாய் அழகாய் குடும்பம் நடத்தும்

காமம்

கன்னி உடன்கூடி காலம் போக்கிட

கசடுநிறை உறவுடன் காலத்தால் அழியும்!!!

–    வெ. மதுசூதனன்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad