ரோசா இதழ் பழப்பாகு (Rose-petal jam)
சின்னச் சின்ன ரோசா, ரோசாவே என் ராசாவே என்றெல்லாம் தமிழகச் சினிமாவில் பலரக நறுமணம் மிக்கச் செடிகளூடு பூங்காக்களில் ஓடியாடும் காதல் பாட்டுக் கேட்டிருக்கிறோம். இந்த அழகிய பூக்களை வாழ்க்கையில் பரிமாறியிருக்கிறோம். அதே சமயம் இந்த இதழ்களை எவ்வாறுதான் பலூடா பானம் தவிர்த்துச் சுவைக்கலாம் என்று சிந்தித்திருப்பீர்களா?.
இதோ உங்கள் ஆர்வத்துக்கு ஒரு பழப்பாகு சமையல் குறிப்பு.
வேண்டியவை;
8 ounce உடன் மலர்ந்த ரோசா இதழ்கள் (Fresh Petals)
1 மேசைக்கரண்டி எலுமிச்சைப் பழச்சாறு (Lemon juice)
1 ½ lbs சீனி (sugar)
1 கோப்பை ரோசா நீர் (Rose water)
செய்முறை:
ரோசா இதழ்களைத் தண்ணீரில் அலம்பி அகன்ற தட்டில் உலர வைக்கவும். சீனியை எலுமிச்சைச் சாறு மற்றும் ரோசா நீரில் நன்றாகக் கலக்கவும். அடுத்து ரோசா இதழ்களைச் சீனிக் கலவை நீரில் அறை வெப்ப நிலையில் அல்லது Ovenஇல் 2-3 மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் அடுப்பில் மெதுவாக ஒரு பாத்திரத்தில் சூடேற்றிக் குமிழிகள் தோன்றும் வரை 30 நிமிடங்கள் வரை கலவையைக் கொதிக்க வைக்கவும். அடுத்துக் கலவை தடித்து பழப் பாகுவாக வர சிறிய கண்ணாடிப் போத்தல்களில் வார்த்து மூடிச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
பின்னர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து, வேண்டிய போது உரொட்டியுடன் பரிமாறிக் கொள்ளலாம்.
– யோகி அருமைநாயகம்.