\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

டுவின் சிட்டீஸ் தமிழர் திருவிழா

tcta-pongal-stage-banner_620x620சனவரி மாதம் 17ம் திகதி சனிக்கிழமை மதியத்திலிருந்து மாலைவரை டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் Twin Cities Tamil Association (TCTA) தைப்பொங்கல் தமிழர் திருவிழாவை தமிழன்பர்களுடன் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி ரிச் ஃபீல்ட் நடுநிலைப் பள்ளியில் Rich Field Middle School நடைபெற்றது. தமிழர் திருவிழாவில் பள்ளி செல்லும் பாலகர்களிலிருந்து துள்ளி விளையாடும் சிறுவர் சிறுமியர் தொட்டு பெரியவர்கள் வரை யாவரும் மேடையிலும் அவையிலும் பங்குபெற்று சிறப்பு சேர்த்தனர்.

தமிழர் திருவிழாவானது தமிழ்த்தாய் வாழ்த்தின் பின்னர் திரு சண் குதலிங்கம் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திருவிழாவில்  பொங்கலை மையமாக வைத்து மேடையலங்காரம் தொடங்கி நிகழ்ச்சி நிரல்வரை அனைத்திலும்  முக்கியத்துவப்படுத்தி அமைத்திருந்தனர். பாரம்பரிய நடனம், பேச்சு, பட்டிமன்றம், கவிதை சமர்ப்பணம், மெல்லிசை, பல்வகை இணைவு நடனங்கள் fusion dances, நாடகம் போன்ற பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.   ஏறத்தாழ நாற்பதுக்கும்  மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், மேலும் TCTA குழுமிய அறிக்கை, உரைகளையும் கொண்டு அமைந்திருந்தது.

டுவின் சிட்டீஸ் தமிழ்ப்பாடசாலை வளர்ச்சியைப் பற்றி திரு. விஜே குமார்  அவர்கள் சபையினருக்கு பாடசாலையின் தமிழ்க்கல்வி நோக்கு, பல்வேறு பிள்ளைகள் பங்குபெறும் போட்டிகள், மற்றய வருடாந்த அறிக்கைதனையும், பாடசாலை தொண்டர்கள் பணிகளையும் எடுத்துரைத்தார். மேலும் அவர் பிள்ளைகளின் தமிழ்க்கல்வி மேம்பட ஆசிரியர், பெற்றோர் ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

அதே சமயம் இந்த நிகழ்வை நடத்திய TCTA குழுமியமும் தமது அறிவிப்புக்களையும் தந்தது. புதிய 2015ம் வருட  செயற்குழுவை சென்றாண்டின் தலைவர் திரு கோ முருகேசன் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார். TCTA 2015இல் திரு செந்தில் ராமமூர்த்தி அவர்களின் தலமையில் இயங்கவுள்ளது. ராமமூர்த்தி சென்ற ஆண்டு TCTA நிகழ்வுகள், பணிகள், தொண்டுகள் பற்றியும் பேசினார். குறிப்பாக TCTAவின் அங்கத்துவர்கள் சமூக சேவையாக உணவு பொட்டலங்கள் தயாரித்துப் பரிமாறல் மற்றும் இரத்த தானம் போன்றவற்றை மேற்கொண்டதைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

ட்வின்சிட்டீஸ் தமிழர் திருவிழாவானது திரு ராஜ் பச்சையப்பன் அவர்களின்  நன்றியுரையுடன் முடிவுபெற்றது.

 

தொகுப்பு – யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad