வசீகர வஞ்சி
கவிஞன் எழுதிடப் பிறக்கும் பேருவகை
கரும்பென இனித்திருக்கும் அவள் இடை
கைதேர்ந்த ஓவியன் காமுறும் தூரிகை
வாய்திறந்து பேசிட உதிர்ந்திடும் நன்முத்து
வாலிபப் பருவத்தில் விதைத்திடும் காமவித்து
வானத்து நிலவழகாய் வசீகர முகம்பார்த்து
வாழ்க்கை இவளுடனே, வலிமையாய் அறிவித்தது
மத்தளச் சிரிப்பொலி மண்மீது சிதறிட
மொத்தமும் மறந்தே பித்தனாய் மயங்கிட
மலரவள் சூடிடும் மலர்தரை வீழ்ந்திட
மடிமீது துயிலுரும் மங்கையாய் ஏந்திட
பலர்பார்த்து நின்றதும் பரிகசித்துச் சிரித்ததும்
பழுதாகத் தோன்றிடாப் பருவத்தின் தாக்கமும்
பலகாலம் கனவிலே பலவிதமாய் ரசித்ததும்
படுக்கையறைத் தனிமையில் பஞ்செனவே எரிந்ததும்
சந்தனக் குளிரிலே வெந்ததந்த தேகமும்
கந்தக வெம்மையாய் எந்தனை எரித்ததும்
மொந்தையாய்க் கள்ளுண்ட மயக்கினைத் தருமவள்
வந்தனம் சொல்லிடும் வசீகரத் தோற்றமே !!
வெ. மதுசூதனன்.
**//கரும்பென இனித்திருக்கும் அவள் இடை//**
இடையா? இதழா?
வணக்கம் லெட்சுமணா, சொல்ல நினைத்தது இடையே. தவறிய பிரயோகமல்ல. கேள்விக்கு நன்றி.