\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மெல்லிதழ் முத்தம்

Filed in இலக்கியம், கவிதை by on August 31, 2015 0 Comments

mellithazh_muththam_620x403பனிக்கால மினசோட்டா  நதிகளாய்

இறுகிப் போன முகத்துடன்

கண்ணாடி வீட்டில் இருந்து

கல்லெறிய முயல்கிறான்…

கிடைத்த ஒரு முத்தத்தைச்

சரிசமமாகப் பகிர்ந்து கொண்டபின்

மீண்டும் முடியாது என

அடம்பிடித்து முறித்துக் கொண்டவளிடம்

மற்றுமோர் முத்தத்திற்கு முனைந்து

காதோரம் ஊதிவிட்டுத் திரும்பிய பின்

தோளில் தூங்கும் குழந்தையை

படுக்கைக்கு மாற்றுவது போல்

சத்தமே இல்லாமல் அவளைப் பிரிந்தான்

மூடிய கதவின் சாவித் துவாரங்களிடையே

ஒவ்வொரு சொற்களும் கழன்று விழும் போது

மீண்டும் வாயினுள் நுழைய முடியாதவாறு

பூட்டப்பட்டு விடுகிறன அவனின்  

அன்பிற்குரிய சொற்கள் அனைத்தும்….

மீண்டும் பின்னிரவில் கொடுத்த

அடக்கம் செய்யப்பட்ட அந்த முத்தம்

பற்றிய நினைவுகளுடன்  

ஒரு பூனை போலவும்…

காத்துக் கிடந்து குறி நோக்கி

மெல்ல நகரும் புலி போலவும்…

வெகு இயல்பாய் தடம் பதித்து

பூட்டிய கதவினை மெல்லத் திறந்து

மீண்டும் பதித்தான்

ஒரு மெல்லிதழ் முத்தம்.

– தியா –

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad