மினசோட்டாவின் கதை
ஏறத்தாழ ஒரு மில்லியன் வருடங்களிற்கு முன்னர் இருந்து மினசோட்டாவின் கதையை ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் பூகோளத்தின் கால் பகுதியைக் கவர்ந்து காணப்பட்டது. இதுவே ஆழ்ந்த உறைபனியின் வடதுருவம் மாத்திரமல்ல அதன் வட நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளும்
மூடப்பட்டிருந்தது. இக்காலம் பனியுகம் எனப்படும்.
அக்காலத்தில் வடதுருவமானது பலதட்டுப் உறை பனிப்பாறைகளினால்
ஆயிரமாயிரம் ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன. அதன் பின்னர் பனியுருகி
நீர்த்தேக்கங்களும்,காடுகளும், விலங்குகளும் செழித்தன. ஆயினும் இன்னும்
பல்லாயிரம் ஆண்டுகளின் ஆழ்ந்த உறைபனி மீண்டும் திரும்பி உயிர்த்த
யாவற்றையும் குளிரில் உறைத்து அழித்தது. இவ்வாறு பனியுகமானது நான்கு
தடவை உறைபனி மூடல், உருகலாகிய காலநிலைச் செயற்பாடுகள் நடந்தன.
இறுதி மினசோட்டா நிலப்பரப்பு உறைபனிப்பாறைகள் 10,000 ஆண்டுகளிற்கு
முன்னர் நடைபெற்றது. இந்தப் பனியுருகலானது வடதுருவத்திலும்,
கிறீன்லாந்திலும் இன்றும் நடைபெற்றவாறுள்ளது.
உறைபனிப்பாறைகள் இதனாலான உருவாகிய பனிமலைகள் தமது
பாரத்தினாலேயே கனேடிய வடமேற்குப் பிரதேசம் மற்றும் லபரடோர்
labrador பிரதேசங்களில் இருந்து மினசோட்டா மேலான நிலப்பரப்புக்கள்
யாவற்றையும் கடந்து பாறைகளை உடைத்து, தாவரங்கள்,சிறுபாறைகள், மற்றும் செழிப்பான மண் தரை உருவாதல் போன்றவற்றிற்குக் காரணியாகியது.
மினசோட்டாவின் செழிப்பான விவசாயத்திற்கு வளமான பரந்த மண்
தரையமைப்பையும் தந்தமைக்கு உறைபனிப்பாறைகளே காரணியகும்.
உருகும் உறைபனிப்பாறைகள் மினசோட்டா தரைப்பகுதி முழுவதும் பாரிய
நீர்த்தேக்கங்களை உருவாக்கிச் சென்றன. இந்த பாரிய நீர்த்தேக்கங்கள், கடலை
நோக்கி வடியத் தொடங்கப் பாரிய ஆறுகளும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளும்
உருவாகின. இந்த நீர்வடிப்புக்கள் காலாகாலத்தில் பாரிய பிரேயரி
புற்றரைகளையும், நடுநிலைக்காடுகளையும், பல்லாயிரம்
ஏரிகள்,குளங்கள்,குட்டைகளையும் உருவாக்கியது. இதுவே மினசோட்டா
மாநிலத்திற்குப் பெருமைதரும் வட அமெரி்க்க உபகண்டத்தில்
பத்தாயிரத்திற்கும் மேலான ஏரிகள் கொண்ட மாநிலம் என்பதாகும்.
-யோகி-