\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வெள்ளப் பாதுகாப்புக் கைமுறைகள்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 27, 2015 0 Comments

vellap-paathukaappu-muraikal_620x475வெள்ளத்தின் முன்பு

  • கட்டிடங்களை வெள்ளப்பெருக்குத் தரைகளில் தவிர்த்தல்
  • கட்டிடங்களின் அத்திவராம் போடும் போதே அடமழை வெள்ளப் பெருக்குத் கடைமுறைகளைக் கையாளுதல் – குறிப்பாக மண்மேட்டு அணை, சீமந்துக் கல்பாறை அணை மற்றும் தறிக்கட்டைகள் போடுதல்
  • கட்டிடத்தின் தாழ்ந்த பகுதிகள், நில அடி அறைச்சுவர்களில் தடித்த நீர் ஊறுதல் தடுக்கும் சீமெந்து மற்றும் கட்டிடப் சாந்துகளைப் waterproof compounds பூசுதல்
  • காலநிலை அறிவிப்புக்களில் வெள்ள அவதானத்திற்கும், வெள்ள அபாயத்திற்குமான வித்தியாசங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளல்
  • வெள்ள அவதானம் – அடைமழை மற்றைய இயற்கைக் காரணிகளால் குட்டை நீர்த் தேக்கம் ஏற்படலாம்
  • வெள்ள அபாயம் – நிச்சயமாக வெள்ளம் வரலாம், அதிலிருந்து அகன்று கொள்வதற்கு உடன் தயாராகவேண்டும்

வெள்ளத்தை எதிர் நோக்க வேண்டிய தருணம்

  • நேரம் எடுக்காது உடன் தயாராகவேண்டும். கையில் எடுத்துச் செல்லக்கூடிய உங்கள் அதிமுக்கியமான உபயோகப் பொருட்கள், அடையாள அட்டைகள், பையைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். முக்கியமாக மருந்து மாத்திரைகளை மறக்காது உள்ளடக்கவேண்டும்.
  • அரச, பாதுகாப்பு, சுகாதார இலாக்காக்கள் சேவைகள், அவசர இடம்பெயரச் சொல்லி கட்டளை வந்தால் தாமதமின்றி உடன் வெளியேற வேண்டும்.
  • வெள்ளம் வரும் வேகத்தினால் வீட்டை, இருக்கும் இடத்தை விட்டு வெளியேற முடியாவிட்டால் உடன் கட்டிடத்தின் உயர் பாகத்திற்கு, உயர் மாடி, கூரைக்கு ஏறிவிடவேண்டும்.
  • வெளியேற வேண்டுமாயின் வீட்டில் வெளியே வைத்திருக்கும் கதிரை மேசை தளபாடங்களை உயர் மாடிக்கு எடுத்துச் செல்லவும்
  • மின்சார உபகரணங்களை நிற்பாட்ட வேண்டும். முடிந்தளவு முயற்சி செய்து பிரதானமான மின் இணைப்பை துண்டித்துக் கொள்ளவும்.

வெள்ளத்தின் போது

  • ஒரு போதும் ஓடும் வெள்ளத்தினுள் கால் வைக்காதீர்கள். நாம் சிறிதென நினைப்பினும் சுமார் ஆறு அங்குலம் இல்லை பதினைந்து சென்டிமீட்டர் அசையும் வெள்ளமே சாதாரண  மனிதரைச் சறுக்கி விழுத்திவிடும்.
  • வெள்ளத்தில் நடக்க வேண்டியிருந்தால் ஓடும் வெள்ளத்தைத் தவிர்க்கவும். முடிந்தால் மரக்கிளை, குச்சுத் தடியினால் உங்களுக்கு முன்னால் உள்ள அடித்தரையைத் தட்டி அதன் உறுதியையும் அறிந்து கொள்ள வேண்டும்
  • வெள்ளத்தினுள் வாகனத்தை ஓட்டப் படாது. வெள்ளம் விரைவில் வந்து சூழ்ந்தால் உடன் வாகனத்தை விட்டு வெளியேறி அயலில் உள்ள உயர் பகுதிக்கு விரைந்து சென்று ஏறவேண்டும்.
  • வெள்ள நீரில் தோய்ந்திருக்கும் தறுவாயில் எந்த மின் உபகரணங்களையும் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளத்தின் பின்னர்

  • வரும் செய்திகளைக்கேட்டு அறிந்து எங்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளவேண்டும்.
  • வெள்ள நீரை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளவேண்டும். வெள்ள நீர் பல மாசுப்பொருட்களும், நில எண்ணெய் மற்றும் இரசாயனம், மலசலம் போன்றவற்றையும் நிலங்கீழி உடைந்த மின்சார உபகரணங்களிலிருந்து பிசியும் மின்சாரத்தையும் கொண்டிருக்கலாம்.
  • ஓடும் வெள்ளநீரி்ல் நடத்தலாகாது
  • வெள்ள நீர் வடியும் இடங்களில் அதிக அவதானம் தேவை. குறிப்பாக சாலை,ரோட்டுக்கள் வெள்ள நீரினால் வலிமை குன்றியிருக்கலாம் அதே சமயம் சிக்குப்பட்ட வாகனங்களின் பாரம் தாங்கமுடியாசு உடைந்து, நொறுங்கவும் கூடும்.
  • மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு விழுந்து கிடந்தால் பெரிதோ, சிறிதோ அவ்விடத்திலிருந்து அகல வேண்டும். முடிந்தால் மின்சார இலாக்காவிற்குத்தெரிவிக்கவும்.
  • வீடு, பொருள் என்று கண்ணை மூடியவாறு உள்ள அபாயம் தெரியாது திரும்பாது உரிய அரச,பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவித்தலைப் பார்த்து உரிய இடத்திற்குப் போக வேண்டும்.
  • வெள்ளநீர் சூழ்ந்துள்ள கட்டிடங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்
  • உடைந்த மலசல கூடங்கள், குழாய்கள், சாக்கடைகள், நிலத்தில் ஊறும் இடங்கள் மென்மெலும் தொற்று நோய்களைத் தரும்.
  • வெள்ள நீரில் ஊறிய சகலதும் மேல் கூறப்பட்ட மாசுக்கள் இருக்கும், எனவே விசக்கிருமிகள் நீக்கும் சுத்தம் செய்யும் பொருட்களால் கழுவி உலர்த்திப் பாவித்துக் கொள்ளவேண்டும். துப்பரவு செய்ய முடியாவிட்டால் எறிந்து விடலே வீட்டில் உள்ளவர் சுகாதாரத்திற்கு நலம்.

       

                    தொகுப்பு – அமெரிக்க அரச நிவாரண சேவையிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad