இதழ்
உன் இதழெனும் மடலில்
கவிதை தீட்டி
இளைப்பார …
என் மனம் துடிக்கிறதே!
உன் இதழோரம்
கவியாயிரம் பாட உன்
கதவோரம் நான்வர
என் மனம் எத்தனிக்கிறதே!
உன் இதழின் சுவையில்
பழரசத்தின் சுவையை
என் மனம் …..
மறக்கிறதே!
உன் இதழின் வெடிப்பிற்கு ..
என் இதழே மருந்தாக
பாவி மனம்
தவிக்கிறதே!
உன் இதழமுதம்
எனக்கு தேவாமிர்தம் …
அதைப் பருகிட என் மனம்
பறக்கிறதே!
சகியே!
இவ்வையமும் துச்சமாகிறதே!
உமையாள்