துருவக்கரடி தோய்தல் 2016 (Polar Bear Plunge)
துருவக்கரடி தோய்தல் (Polar Bear Plunge) கொண்டாட்டம் ஒவ்வொறு ஆண்டும் குளிர் காலத்தில் நடை பெறுகிறது. இதில் பலதரப்பட்ட தன்னார்வலர்களும் மற்றும் தன்னார்வல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாய்க் கலந்து கொள்கிறார்கள். உறைந்திருக்கும் ஏரிகளில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து, வெறும் நீச்சலுடையுடன் பனிக்கட்டிகளின் அடியில் இருக்கும் நீருக்குள் பாய்ந்து, கடும் குளிரில் நீந்துவது இங்கு ஒரு பிரபலமான விளையாட்டு . இந்த நிகழ்வு வட அமெரிக்காவில் பல மாநிலங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை விசேட ஒலிம்பிக் போட்டிகளுக்காகச் செலவிடுவர். இந்த வருட ஃபிப்ரவரி மாதம் மினசோட்டாவிலுள்ள உட்பெரி நகரில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் புகைப்படங்களை இங்கே காணலாம்:
Polar Bear Plunge 2016
தொகுப்பு: ராஜேஷ் கோவிந்தராஜன்.