\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

குமரிக்கண்டம் எதிர்கோணம்

lemuriya_620x443குமரிக்கண்டத்தின் எதிர்கோணம் என்றவுடன் குமரிமுனைக்குத் தெற்கேயும் இன்றைய ஈழம் உள்ளிட்ட பகுதிகளை அடக்கியதாகவும், அதற்கும்  தெற்கே இன்னும் பெரும் நிலப்பரப்புடன் இருந்ததாக அறியப்பட்ட லெமூரியா என்னும் குமரிக்கண்டத்தை இந்தியாவிற்கு   வடக்கே இருந்ததாக சொல்லப் போகின்றாயா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் அது இந்தியாவிற்கு வடமேற்குத் திசையில் இருந்ததாக இந்த கட்டுரையில் சொல்லப் போகிறேன். லெமூரியா என்பது தமிழ் இலக்கியங்களின் சான்றுப்படியும், சில அறிஞர்களின் கூற்றுப் படியும் சுமார் 3000 மைல் அடங்கிய ஒரு மாபெரும் கண்டமாகத் திகழ்ந்திருக்கின்றது. எவ்வளவு பெரிய கடல்கோள்கள் (Tsumani) வந்திருந்தாலும் ஒரு பிரமாண்டமான கண்டமே கடல் கொள்வதற்குச் சாத்தியம் இல்லை என்ற வாதமும்,  குமரிக்கண்டம் இருந்த பகுதிகளாக நம்பப்படும் பகுதிகளில் ஆழம் குறைவான பகுதிகள் இருப்பது போல  ஆழம் நிறைந்த பகுதிகளும் இருப்பதும் லெமூரியாவின் எதிர்கோணம் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அப்படியானால் தமிழ் இலக்கியங்களில் உள்ள கடல்கோள் அழிவு என்பது வெறும் கட்டுக்கதையா? நிச்சயமாக அப்படி இருக்கச் சாத்தியம் இல்லை. உலகின் உள்ள ஆதிக்குடிகளின் கதைகளில் எல்லாம் இந்த வெள்ளச் செய்தி சொல்லப்பட்டிருப்பதால் இதைக்

கட்டுக் கதையாக எடுத்துக் கொள்ள முடியாது. கடல்கோள் அழிவுகள் ஏற்பட்டதை உயர்வு நவிர்ச்சியாகச் சொல்லப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டும்.

இன்றைய ஈரான் மற்றும் ஈராக் உள்ளிட்ட பகுதிகள் பைபிள் காலத்தில் பாபிலோன் என்றும் அதற்கு முற்பட்ட காலத்தில் மெசபடோமியா என்றும் அதற்கும் முற்பட்ட காலத்தில் சுமேரியா என்றும் அழைக்கப்பட்டன. இந்தச் சுமேரியப் பகுதிகள் கடல் கொண்ட தென்னாடு எனப் பெயர் பெற்ற குமரிக் கண்டமாக இருந்திருக்கலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சுமேரியப் பகுதிகள் கடல் கொண்ட தென்னாடாக இருக்கலாம் என்று அறிஞர்கள் தெரிவு செய்ததற்குப் பல காரணங்கள் இருப்பதாக அறிய முடிகிறது. அவை; குமரிக் கண்டத்திலும் சுமேரியப் பகுதிகளிலும் ஓடும் ஆறுகளின் எண்ணிக்கை;  அந்தப் பகுதியின் பெயர்கள்  கடல் சீற்றத்தால் சுமேரிய நாகரிக மக்களின் புலப் பெயர்வு முறை கடல் கொண்டதால் குமரிக் கண்டத்து மக்கள் புலம் பெயர்ந்து தமிழகம் வந்ததை ஒத்திருப்பது.

பஃறுளி ஆறு

சுமேரியாவில் ஓடுகின்ற யூப்ரிடிஸ் ஆற்றை சுமேரிய மொழியில் ஃப்ரட் என்றும் கிரேக்கர்கள் ஃப்ரெட்டீஸ் என்றும் அழைக்கிறார்கள். இந்த ஆற்றை பாபிலோனிய மொழியில் ப்ஃகுரத் (pahrat) என்று அழைக்கின்றனர். இதுவே ஹீப்ரு மொழியில் புகு-ரத் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றின் கரையில் ஏழு நாடுகள் இருந்ததாகவும் அவை யாவும் இந்த ஆற்றின் நீரைப் பகிர்ந்ததாகவும் அறியப்படுகின்றது.  ஃப்ரட் என்பதற்குப் பகிர்தல் என்று பொருள். பஃறுளி  என்பது பகிர்ந்து அளி என்ற பொருளில் வருவதால்

இவ்விரு ஆறுகளும் ஒன்றே எனக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

குமரி ஆறு

டைகிரிஸ் என்பது ஒரு பாபிலோனியச் சொல். இது சுமேரிய மொழியில் இடிகினா என்று அழைக்கப்படுகின்றது. இதற்குத் துள்ளி ஓடும் நதி என்று அர்த்தம். விண்ணுலகின் அரசப் பதவி (kingship in heaven) என்னும் ஒரு புராணத்தில் குமர்பி என்னும் கடவுளின் வயிற்றிலிருந்து இந்த நதி உருவானதாகச் சொல்லப்படுகிறது. அதனால் இந்த நதியை the song of kumarb என்று அழைக்கின்றனர்.

குபர்பி ஆறும் குமரி ஆறும் ஒத்த ஒலிப்பில் உள்ளதாலும் இந்த நதிகளின் கரையில் உள்ள பகுதிகளை ஆண்ட என்-கி என்ற மன்னனும் , முதற்சங்கம் அமைத்த முதலாம் பாண்டிய மன்னன் மா-கீர்த்தியும் பெயர்களில் ஒற்றுமை இருப்பதாலும், அவர்களின் செயற்கரிய செயல்களில் ஒன்றுபோல் இருப்பதாலும், அவர்களிருவரும்

ஒருவரே எனக் கருதும்படி இருக்கிறது என அறிஞர்கள் வாதத்தை முன் வைக்கின்றனர்.

மாகீர்த்தி

சுமேரிய மொழி இலக்கணப்படி என்(en) என்கின்ற வார்த்தை மே அல்லது மா என உச்சரிக்கப்படும். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய இளம்பூரணாரின் கூற்றுப்படியும், சதாசிவ பண்டாரத்தார் கூற்றுப் படியும் மாகீர்த்தி என்னும் பாண்டிய மன்னனே முதல் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் ஆவார். ஆனால் இறையனார் அகப்பொருளில் மாகீர்த்தி பற்றிப் பேசவில்லை. ஆகையால் மாகீர்த்தி என்பது ஒரு மன்னனுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாகக் கொள்ள வேண்டும். இதே போன்று என்-கீ என்ற சுமேரிய மன்னனின் பேரும் புகழும்  ஒத்துப் போகின்றது.

என் – மா என உச்சரிக்கப்படும்

கீ- கீர்த்தி என உச்சரிக்கப்படும்

அப்படியானால் காச்சின பெருவழுதி எங்கே? மாமதுரை எங்கே? கபாடபுரம் எங்கே? எனக் கேட்போரே, சற்றே பொறும்.

உலகின் முதல் நெடுங்கதையான சுமேரியர்களின் கில்காமேஸ் சரித்திரத்தில் வரும் வெள்ளச் செய்தியும் , தமிழர்களின் கடல் கொண்ட செய்தியும் ஒத்திருப்பதை அறியவும், காய்சினப்பெரு வழுதி  ஆண்டதும், முதற்சங்கம் கண்டதும், யூப்ரிடிஸ் ஆற்றின் கரையில் அமைந்த மாமதுரையில் தான் என்பதை அறியவும், இரண்டாம் சங்கம் கண்ட கபாடபுரமும் இவ்வாற்றின் கரையில் தான் இருந்தது என்பதை அறியவும், அடுத்த பாகத்தில் சந்திப்போம்.

  • சத்யா

தகவல்கள்

  1. தமிழரின் தோற்றமும் பரவலும்  – பா. பிரபாகரன்
  2. பஃறுளி முதல் யூப்ரட்டீஸ் வரை- மா.சே விக்டர்
  3. பாண்டியர் வரலாறு – சதாசிவ பண்டாரத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad