அன்பை நேசியுங்கள் !
அன்பு
எல்லா பரிசுகளையும்
ஏற்றுக் கொள்கிறது
குண்டூசியைக் கூட.
அன்பு
எல்லா கடிதங்களையும்
படித்து ரசிக்கிறது
சோகமாக இருந்தால் கூட.
அன்பு
எல்லா துன்பங்களையும்
தாங்கிக் கொள்கிறது
மரணத்தின் பிடியில் கூட
அன்பு
எல்லா கவிதைகளையும்
படித்து இன்புறுகிறது
சோகக் கவிதையைக் கூட
அன்பு
பனித் துளிகளை
கண்டு மகிழ்கிறது
கண்ணீர் துளிகளைக் கூட
அன்பு
எல்லா கண்களையும்
கருணையுடன் பார்க்கிறது
குருடனாக இருந்தால் கூட
பூ.. சுப்ரமணியன்