நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி (NATYA MANJARI DANCE COMPETITION 2016)
சென்ற ஆண்டைப் போல்இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஸ்ரீ நாட்டிய மஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று.
இந்தியப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டியம் (classical Dance) தனி நபர் மற்றும் குழுவினர்களுக்கான போட்டிகளாகத் தனித்தனியாய் நடத்தப்பட்டது. அதேபோல் பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்களும் Non classical (Semi classical / Folk / Bollywood). தனி நபர் மற்றும் குழுவினருக்கு என இரு பிரிவாக நடத்தப்பட்டது. போட்டியில் பலரும் கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினர். அந்த நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள் வாசகர்களின் பார்வைக்கு:
NATYA MANJARI DANCE COMPETITION 2016
படங்கள்: இராஜேஷ் கோவிந்தராஜன்.